ஐதராபாத் மத்திய பல்கலை கழக ஆய்வு மாணவரான போராளி ரோகித் வெமுலா நிறுவனபடுகொலைக்கு! ஆளானசெய்தி இந்திய சிவில் சமூகத்தையே அச்சப்பட வைத்திருக்கிறது.
சாதிய ,மதவாத சக்திகளுக்கு எதிராக இளைய தலைமுறையை அணிதிரட்டிய அவருக்கு , தீவிர மதவாத சக்திகளால் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக நிர்வாகம்போராளி ரோகித் வெமுலாஅவர்களுக்கும் , அம்பேத்கர் வட்ட மாணவர்களுக்கும் ,அவர்கள் பல்கலைகழக வளாகத்தில்உணவகம் , நூலகம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என விதித்த தடையை எதிர்த்து, கடந்த ஒரு வாரகாலமாக , பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் கூடாரம் அமைத்து ஜனநாயக வழியில் போராடினர்.
ரோகித் வெமுலா துணைவேந்தரை சந்தித்து பேச முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு வகையான சமூக புறக்கணிப்பை ஜீரணிக்க முடியாத போராளி ரோகித் வெமுலா தூக்குமாட்டி தற்கொலை செய்யும்நிலைக்கு ஆளாகியுள்ளார். இது ஒரு நிறுவனப்படுகொலை என்பதால்,மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடெங்கும் அனல்பறக்கும் விவாதங்கள் எழுந்துள்ளது.
அவரது உடலோடு உரிமைக்குரல் எழுப்பிய மாணவர்களிடமிருந்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறை, அவரது பெற்றோர்,உறவினர்கள், நண்பர்கள், கொள்கை தோழர்களை கூட அஞ்சலி செலுத்தவிடாமல் அந்தப் போராளியின்உடலை எரித்
திருக்கிறது .இது ஜனநாக விரோதசெயல் மட்டுமல்ல :ஒரு வகையான அரச பயங்கரவாதமாகும்.
போராளி ரோகித் வெமுலாவின் எரிக்கப்பட்ட எலும்புத்துண்டுகளும்,சதைத்துண்டுகளும் ஆயிரமாயிரம் மக்கள் போராளிகளை உருவாக்கும் என்பதை அதிகார வர்க்கம் உணரவேண்டும்.
போராளி ரோகித்வெமுலாவுக்காக துயருறும் அனைவரின் வேதனையிலும் மனிதநேய மக்கள் கட்சியும் பங்கேற்கிறது. போராளிகள் சாவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பதை வரலாறு நிரூப்பித்துக்கொண்டிருக்கிறது.
இவண்
M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

No comments:
Post a Comment