SALAAM

live tv

Tuesday, September 25, 2012

நம் உயிரிலும் மேலான முஹமது நபி (ஸல்) அவர்களை இழிவுபடிதியததை கண்டித்து திருத்துறைபூண்டியில்........


நம் உயிரிலும் மேலான முஹமது நபி (ஸல்) அவர்களை இழிவுபடிதியததை கண்டித்து திருத்துறைபூண்டியில்........


அனைத்து ஜமாஅத் சார்பாக கண்டன ஆரபட்ட்ம் நடைபெற்றது அல்லாஹு அக்பர் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர் .........






Wednesday, September 19, 2012

முஸ்லிம்களால் முடக்கப்பட்டது சென்னை மாநகரம்.... நாரே தக்பீர்.............. அல்லாஹூ அக்பர்............










அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம்-ஸ்தம்பித்தது சென்னை...

சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் செனனை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆ
டிப் போய் விட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்குள்ளானது. இதைத் தொடர்ந்து 2 நாட்களுக்குஅமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது பலரையும் வியப்படைய வைத்தது. காரணம், அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை. இதனால் போலீஸ் கமிஷனர் திரிபாதியின் முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர். இதில் ஒருதரப்பினர் போலீசாரின் அரணை உடைத்துக் கொண்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முன்னேற முயற்சித்தனர். அவர்களையும் போலீசார் தடுத்தனர்.
இந்தப் போராட்டம் பின்னர் பெரும் வன்முறையாக மாறியது. அரசு பஸ், டூவீலர்கள் உள்ளிட்டவை தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
கடும் போக்குவரத்து நெருக்கடி
சென்னை அண்ணாசாலைதான் நகரின் மையமான போக்குவரத்துப் பகுதி. ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இந்தப் பாதையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன.
இன்னொரு பக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Tuesday, September 18, 2012

18.09.2012 அன்று சென்னையில் அனைத்து அமைப்புகள் சார்பாக அமெரிக்க தூதரக முற்றுகை!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சமுதாய சொந்தகளே!

உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக "இன்னொசன்ட் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தை சாம் பாசைல் என்ற யூத மதவெறியன் வெளியிட்டிருக்கிறார். இதன் பிரத்யேக காட்சிகள் "யூ டியூப்' இணையதளத்தில் வெளியாகி உலகமெங்கும் கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்; அமெரிக்காவும் அதன் ஆதரவு சக்திகளும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; "யூ டியூப்' இணையதளத்திலிருந்து அத்திரைப்படக் காட்சிகளை நீக்கவேண்டும் - ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து

அனைத்து இஸ்லாமிய அமைபுகளும் ஒன்றினைது அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம்................!!.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ,
தமிழ் மாநில முஸ்லிம் லீக் ,
இந்தியன் உணின் முஸ்லிம் லீக் ,
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ,
பாபுலர் பிரான்ட் அப் இந்திய,
இந்திய மனிதேநேய மக்கள் கட்சி ,
இந்திய தேசிய லீக் ,
மற்றும் பல இயக்கம்




Friday, July 13, 2012

நாச்சிகுளம் பகுதியில் இதமான மழை .....


நாச்சிகுளம் பகுதியில் இதமான மழை .....


பல நாளாகவே வெயில் தனது கோரதாண்டவத்தை கட்டி வருகிறது  இந்நிலையில் இன்று அதிகாலை 5 .30 மணியளவில் மிதமான மழை  பெய்தது ....... அல்ஹம்துலில்லாஹ் .......

Sunday, January 15, 2012

நாச்சிகுளம் கடைதெருவில் பொங்கல் சிறப்பு கடைகள் ..............









நாச்சிகுளம் கடைதெருவில் பொங்கல் சிறப்பு கடைகள் ..............

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

Sunday, January 8, 2012

நாச்சிகுளம் பகுதியில் கடும் பனி பொழிவு ...............






நாச்சிகுளம் பகுதியில் கடும் பனி பொழிவு ...............

சில நாட்களாக நாச்சிகுளம் பகுதியில் கடுமையான போழிவகக்வுள்ளது காலை 7 மற்றும் 8 மணியாகியும் பனி சாரல் அடித்த வண்ணம்வுள்ளது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஆட்கள் வந்தால் கூட கண்களில் தென்படுவதில்லை.

என்று பனிபொழி அதிகம் உள்ளதோ அன்று குளிர் குறைவாக உள்ளது .

என்று குளிர் அதிகமாக உள்ளதோ அன்று பனிபொழிவு குறைவாக உள்ளது .

இடங்கள்

1 நாச்சிகுளம் ரயில்வே கேட் .
2 நாச்சிகுளம் கடைதெரு
3 நாச்சிகுளம் பள்ளிவாசல் தெரு .

Wednesday, January 4, 2012

நாச்சிகுளத்தில் மாபெரும் உண்ணாவிருத போராட்டம் ..........




நாச்சிகுளத்தில் மாபெரும் உண்ணாவிருத போராட்டம் ..........


முல்லை பெரியார் அணையின் தமிழ்த்து உரிமையை பாதுகாத்திட கோரியும் மௌனம் சாதிக்கும் மத்திய அரசையும் கண்டித்து மினிலோடு , ஆட்டோ, கார் வேண் ஓட்டுனர் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து மாபெரும் உண்ணாவிருத போராட்டத்தை நடித்தி முடித்தனர் .........

இப்போராட்டம் உடையை நாச்சிகுளம் கடைவீதியில் நடைபெற்றது .......

இப்போராட்டத்தில் அணைத்து கட்சி தோழர்களும் கலந்துகொண்டனர் .....................