SALAAM

live tv

Monday, January 11, 2016

வெளிநாடுவாழ் தமிழக மக்களின் நலன்காக்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்... மமக கோரிக்கை

வேலை நிமித்தமாகவும்,தொழில் நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக மக்களுக்கு உதவிகளையும்,வழிக்காட்டல்களையும் வழங்கவும்,அவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தனி அமைச்சகத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி ம.ம.க சார்பு அமைப்பான மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை சார்பில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை ம.ம.க பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி இன்று(10/01/2016)
தொடங்கி வைத்தார்.

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட நலவாரியம் செயல்படாத நிலையில்,கேரள அரசைப்போல தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டால்தான் வெளிநாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தமிழக மக்கள் பயனடைவார்கள் என பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி தொடக்க விழா நிகழ்ச்சியில் கூறினார்.

இக்கையெழுத்து இயக்கம் ஜனவரி 10 முதல் பிப்ரவரி 10 வரை ஒரு மாத காலம் நடைபெறும்.ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் அனைத்து தரப்பு தமிழக மக்களையும் சந்தித்து கையெழுத்து பெறுவது என்றும்,இதற்கு சமூக இனைய தளங்களில் பரப்புரை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது..

இந்நிகழ்ச்சியில் ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் ராசுதீன்,ம.ம.க பேரவையின் அமீரக மண்டல செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர்,அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் M.சுஹைபுதீன்,சமூக ஆர்வலர் P.சுல்தானுல் ஆரிப்,அமீரக மண்டல நிர்வாகிகள்,அபுதாபி மண்டல நிர்வாகிகள்,துபை மண்டல நிர்வாகிகள்,சார்ஜா மண்டல நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்துகொண்டனர்
-
ம.ம.க தலைமையகம்..

நன்றி:நீதியின் பக்கம் வாட்ஸ் அப் & பேஸ்புக்

நாச்சிகுளம் செய்திகள்

No comments:

Post a Comment