SALAAM

live tv

Saturday, January 23, 2016

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் N.தைமியா அவர்கள் இன்று நள்ளிரவு சமூக விரோத கும்பலால் தாக்கப்பட்டார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை பொது செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருப்பதை பார்வையிட்டுவிட்டு ஓய்வு எடுப்பதற்காக இன்று நள்ளிரவு தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருக்கையில்  பதுங்கியிருந்த சமூக விரோத கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மனிதநேய சொந்தங்கள் அவரை தூக்கி சென்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்  மமக தலைமை நிலைய செயலாளர் சகோதரர் தைமியா அவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலை வண்மையாக கண்டிப்பதோடு வண்முறை கும்பலையும் இந்த வண்முறையை தூண்டிவிட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்


இவன்
நாச்சிகுளம் தாஜுதீன்
மாநில அமைப்பு துனை செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

Wednesday, January 20, 2016

போராளி ரோஹித்வெமலா நிறுவனப்படுகொலை!   மனிதநேய மக்கள் கட்சிபொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி கண்டனம் 

ஐதராபாத் மத்திய பல்கலை கழக ஆய்வு மாணவரான போராளி ரோகித் வெமுலா நிறுவனபடுகொலைக்கு! ஆளானசெய்தி  இந்திய சிவில் சமூகத்தையே அச்சப்பட வைத்திருக்கிறது.

சாதிய ,மதவாத சக்திகளுக்கு எதிராக இளைய தலைமுறையை அணிதிரட்டிய அவருக்கு , தீவிர மதவாத சக்திகளால் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது.


பல்கலைக்கழக நிர்வாகம்போராளி ரோகித் வெமுலாஅவர்களுக்கும் , அம்பேத்கர் வட்ட மாணவர்களுக்கும் ,அவர்கள் பல்கலைகழக வளாகத்தில்உணவகம் , நூலகம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என விதித்த தடையை எதிர்த்து, கடந்த ஒரு வாரகாலமாக , பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் கூடாரம் அமைத்து ஜனநாயக வழியில் போராடினர்.


ரோகித் வெமுலா துணைவேந்தரை சந்தித்து பேச முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு வகையான சமூக புறக்கணிப்பை ஜீரணிக்க முடியாத போராளி ரோகித் வெமுலா  தூக்குமாட்டி தற்கொலை செய்யும்நிலைக்கு ஆளாகியுள்ளார். இது ஒரு நிறுவனப்படுகொலை  என்பதால்,மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடெங்கும் அனல்பறக்கும் விவாதங்கள் எழுந்துள்ளது.


அவரது உடலோடு உரிமைக்குரல் எழுப்பிய மாணவர்களிடமிருந்து அவரது  உடலை கைப்பற்றிய காவல்துறை, அவரது பெற்றோர்,உறவினர்கள், நண்பர்கள், கொள்கை தோழர்களை கூட அஞ்சலி செலுத்தவிடாமல் அந்தப் போராளியின்உடலை எரித்
திருக்கிறது .இது  ஜனநாக விரோதசெயல் மட்டுமல்ல :ஒரு வகையான அரச பயங்கரவாதமாகும்.


போராளி ரோகித் வெமுலாவின் எரிக்கப்பட்ட எலும்புத்துண்டுகளும்,சதைத்துண்டுகளும் ஆயிரமாயிரம் மக்கள் போராளிகளை உருவாக்கும் என்பதை அதிகார வர்க்கம் உணரவேண்டும்.

போராளி ரோகித்வெமுலாவுக்காக துயருறும் அனைவரின்  வேதனையிலும் மனிதநேய மக்கள் கட்சியும்  பங்கேற்கிறது. போராளிகள் சாவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பதை வரலாறு நிரூப்பித்துக்கொண்டிருக்கிறது.                                                 

இவண்                       


M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

Monday, January 18, 2016

கல்விக்காக அள்ளித்தந்த ஆசிம் பிரேம்ஜி... மூன்றாவது ஆண்டாக முதலிடம்!!


                 
  டெல்லி: விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆசிம் பிரேம்ஜி கல்விக்காக ரூ.27, 514 கோடி நன்கொடை அளித்து முதலிடத்தில் இருக்கிறார்.
2015 ஹுருன் இந்தியா பிலான்தபரி லிஸ்ட் என்ற அறிக்கை இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த மூன்றாவது ஆண்டாக இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்திய வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் எந்த அளவுக்கு கடந்த ஆண்டில் (2014 நவம்பர் முதல் 2015 அக்டோபர் வரை) நன்கொடைகளை அளித்துள்ளனர் என்பது குறித்த ஆய்வுப் பட்டியல் இது. ஷாங்காயைச் சேர்ந்த ஹுருன் ஆய்வுக் கழகம் இந்த தகவல் கோப்பை சேகரித்து வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 10 கோடிக்கு மேல் தானம் கொடுத்தவர்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதில் டாப் 10 இடத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் இடம் பெற்றுள்ளனர்.
2015ம் ஆண்டு நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆசிம் பிரேம்ஜி ரூ.27, 514 கோடி அளித்துள்ளார். 2014ம் ஆண்டு விப்ரோ அதிபர் ஆசிம் பிரேம்ஜி ரூ. 12,316 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கி முதலிடத்தில் இருந்தார். 2015ம் ஆண்டில் பிரேம்ஜியின் நன்கொடை இருமடங்காக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் நந்தன் நிலகேனி. அவர் அளித்துள்ள நன்கொடை ரூ.2404 கோடி. இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி இந்தப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார் அவர் அளித்துள்ள நன்கொடை ரூ.1322 கோடி. இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள நன்கொடையாளர்கள் மொத்தம் ரூ.34,077 கோடி அளித்துள்ளனர். இதில் 81 சதவிகிதம் அளவிற்கு நிதி அளித்துள்ளார் ஆசிம் பிரேம்ஜி.
பெரும்பாலும் கல்வித்துறைக்கே அதிக அளவில் உதவிகள் கிடைத்துள்ளன. நன்கொடை அளித்தவர்களில் 50 சதவிகிதம் பேர் கல்விக்காக அளித்துள்ளனர். சமூக வளர்ச்சிக்காக 25 சதவிகிதம் பேரும், 17 சதவிகிதம் மருத்துவம், ஆரோக்கியத்திற்காக அளித்துள்ளனர்.
எச்சிஎல் அதிபர் ஷிவ் நாடார் கடந்த 2013ம் ஆண்டு ரூ. 1864 கோடியை தானமாக அளித்திருந்தார். 2014ம் ஆண்டு சற்று குறைந்து ரூ. 1136 கோடியை நன்கொடையாக அளித்திருந்தார். இந்த ஆண்டும் ஷிவ் நாடார், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் நன்கொடை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


நாச்சிகுளம் செய்திகள்

Sunday, January 17, 2016

இரத்தத்தை இயற்கையான முறையில் சுத்திகரிப்பு செய்ய எளிய வழிமுறைகள்



உடலில் சருமத்தில் மட்டும் தான் நம் கண்களுக்கு தெரியும்படி அழுக்கு சேருகிறது. ஆனால், நமது உணவு பழக்கம், வாழ்வியல் முறை போன்றவற்றால் நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகளிலும் கூட நிறைய அழுக்கு சேருகிறது. அவற்றை நாம் கண்களால் பார்க்க முடியாது, ஏதேனும் உடல்நலக் குறைபாடு அல்லது அறிகுறிகளை வைத்து தான் கண்டறிய முடியும்.

நமது உடலிலேயே மிகவும் முக்கியமானது இரத்தம். இது சீர்கெட்டு போனால், உடல் பாகம் அனைத்தும் சீர்கெட ஆரம்பத்துவிடும். எனவே, அப்படிப்பட்ட இரத்தத்தில் சேரும் அழுக்குகளை போக்க, சுத்திகரிப்பு செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்






இரத்த வகைகளும் சாப்பிட வேண்டிய உணவு முறைகளும்


ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட இரத்த வகை இருக்கும். இரத்த வகையைப் பொறுத்து அவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை சொல்ல முடியும். ஏனெனில் இரத்த வகைகளுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளது. குறிப்பாக ஒருவர் தங்களது இரத்த வகைக்கு ஏற்ற சரியான உணவுகளை உட்கொள்ளாமல், தவறான உணவுகளை உட்கொண்டு வந்தால், அதனாலேயே பல பிரச்சனைகள சந்திக்க நேரிடும்.

அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் எந்த வகை இரத்த பிரிவினருக்கு, எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் வரும் என கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, ஓ இரத்த பிரிவினருக்கு வயிற்று அல்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏ இரத்த பிரிவினருக்கு பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தாக்குதல் அதிகம் இருக்கும். அதிலும் ஏ இரத்த பிரிவு பெண்கள் கருவுறுதலில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அதேப் போல் பி மற்றும் ஏபி இரத்த பிரிவினருக்கு கணைய புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும் சரியான உணவுகளை உட்கொண்டு வந்தால், இவற்றைத் தவிர்க்கலாம். சரி, இப்போது எந்த இரத்த பிரிவினர் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்வது நல்லது என்பது குறித்து காண்போம்.

ஏ இரத்த பிரிவைச் சேர்ந்தவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் சென்சிடிவ்வானது. எனவே இத்தகையவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இவர்களது செரிமான மண்டலமும் சற்று பலவீனமாக இருக்கும். எனவே இந்த வகை இரத்த பிரிவினர் சிக்கன், மீன் மற்றும் மட்டனை அளவாக உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி கேரட், பீச் பழம், பச்சை இலைக் காய்கறிகள், அத்திப்பழம், பேரிக்காய், பூண்டு, வெண்ணெய் பழம் அல்லது அவகேடோ மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
ஏ இரத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பால் பொருட்கள், சாதம் மற்றும் முட்டையை தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு மாற்றாக தயிர், ஆட்டு சீஸ் அல்லது சோயா பால் எடுத்துக் கொள்ளலாம்.
பி இரத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் அன்னாசிப்பழம், வாழைப்பழம், திராட்சை மற்றும் கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் மட்டன் மற்றும் மீனை உட்கொள்வது நல்லது. அதே சமயம் இந்த வகையினர் சிக்கனுக்கு பதிலாக வான்கோழி சாப்பிடுவது நல்லது.

பால், முட்டை சிறந்தது இந்த வகையினருக்கு பால் மற்றும் முட்டை சிறந்த உணவுகள். இந்த உணவுகள் இவர்களின் உடலில் எளிதில் செரிமானமாகி, கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுக்கும்.

இந்த வகை இரத்த பிரிவு மிகவும் அரிதானது. 5 சதவீத மக்களுக்கு தான் இந்த வகை இரத்தம் இருக்கும். இந்த வகையினருக்கு ஏ மற்றும் பி இரத்த பிரிவின் குணாதியங்கள் கலந்திருக்கும். இந்த வகையினர் இறைச்சிகளை உட்கொண்டால், அதில் உள்ள கொழுப்புக்கள் எளிதில் தங்கிவிடும். மேலும் இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது. இவர்கள் முட்டையை எவ்வித அச்சமுமின்றி சாப்பிடலாம்.

ஏபி இரத்த பிரிவினர் அனைத்து வகையான இறைச்சிகள், குறிப்பாக மாட்டிறைச்சிகளை அறவே சாப்பிடக்கூடாது. ஆனால் பால் பொருட்களான சீஸ், வெண்ணெய் மற்றும் இதர பொருட்களை சாப்பிடலாம்.

ஓ இரத்த பிரிவினர் புரோட்டின் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான பருப்பு வகைகள், இறைச்சி, சிக்கன் போன்றவற்றை உட்கொள்ளலாம். அதேப் போல் காய்கறிகள், பழங்கள் மற்றும் கடல் உணவுகளையும் எவ்வித
அச்சமுமின்றி சாப்பிடலாம்

Saturday, January 16, 2016

வேலையில்லா பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ 5 லட்சம் வரை கடன் முதலமைச்சர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்பதால், மத்திய அரசு இதனை மிகக் கடுமையான பேரிடர் என அறிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களில் பெரும் பாலானோருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப் பட்டுவிட்டது. எஞ்சியவர் களுக்கு மிக விரைவில் வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த பெரு மழை வெள் ளத்தால் சிறு, குறு தொழில் முனைவோர் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த மாநில மாக அறிவித்து ஏற்கெனவே தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஏற்கெனவே வழங்கிய கடன்களுக்கு கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறு கடன் உதவி போன்ற பல சலுகைகளை வழங்கி வருகின்றன. வங்கிகளுடன் கலந் தாய்வு கூட்டங்கள் நடத்தி இந்தப் பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக் கைகளை எடுக்கும்படி நான் தலைமை செயலாளருக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள் ளேன்.

வேலையற்ற பட்ட தாரிகளின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிறு தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 5,000 இளைஞர் களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் இத்திட்டத் தின்படி 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கிட நான் உத்தர விட்டுள்ளேன். இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்தும் விலக்கு அளித்து உடனடியாக கடன் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


நச்சிகுளம் செய்திகள்

சமூக வலைதளங்களில் வதந்திகளை அகற்ற தனிப்படை

சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவும் பொய்யான தகவல்களை அகற்ற, காவல்துறையில் ஒரு தனிப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் பரப்படும் பொய்யான தகவல்களை கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வந்த தமிழக காவல்துறை இப்போது, வாட்ஸ் ஆப்பிலும் தனது பணியைத் தொடங்கி உள்ளது.இத்தகைய செய்திகளை 24 மணி நேரமும் இரவு, பகலாக கண்காணிக்க சுமார் 60 பேர் கொண்ட குழு வேலை செய்கிறது.

சமீபத்திய வெள்ளத்தின் போது, ஏரிகள் உடைந்ததாலும், முதலைப் பண்ணைகளில் நீர் புகுந்ததாலும், முதலைகள் மக்கள் குடியிருப்புகளை நோக்கி வருகின்றன என்ற செய்தி பரவியது. செய்தி உண்மையா என்று கேட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு ஏராளமான அழைப்புகள் வந்துகொண்டே இருந்திருக்கின்றன.

கடந்த செவ்வாய்க் கிழமை அன்று, சென்னையில் உள்ள சில பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தது. சமூக ஊடகங்களில் அந்த செய்தி தீயாகப் பரவியதையடுத்துப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காவல்துறை தீவிரமாகப் பரிசோதித்ததில் , செய்தி வெறும் புரளி எனத் தெரியவந்தது.

பொய்யான தகவல்களின் தீவிரத்தையும், வேகத்தையும் குறைக்கும் பொருட்டு, காவல்துறையினர் வாட்ஸ் ஆப்பில் புரளியை மறுக்கும் செய்திகளை அனுப்பத் தொடங்கி உள்ளனர்.

இதன் மூலம் காவல்துறையினர், வெளியாகும் தகவலின் உண்மைத் தன்மையை, சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு அறிகின்றனர். அதை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களுக்குச் செய்திகளை அனுப்புகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கை

தெருக்களில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்கள், காவல்துறையின் கேள்விகளுக்கு சரியான வகையில் பதிலளிக்கவில்லை எனும்போது அவர்கள் காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி பேசும்போது, “சந்தேகத்துக்கு உரிய நபர்கள், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று குற்றங்களைத் தடுக்க, மற்றொன்று தீயவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த.

வேளச்சேரியில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிற்கும் நபர்களை அழைத்துக் கேள்விகள் கேட்கிறோம். சரியான பதில் வரவில்லை என்றாலோ, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாலோ அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கிறோம். சரியான முறையில் பதிலளிக்கிறார் என்றால் அவரை அனுப்பி விடுகிறோம்.

இந்த முறை, பழைய குற்றவியல் வழக்குகளைத் தீர்க்கவும் உதவுகிறது” என்றார்

Tuesday, January 12, 2016

முத்துப்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தர வேண்டும். நெடுஞ்சாலை துறைக்கு மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை.

    

     முத்துப்பேட்டை ஜன – 12
                    
  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மனிதநேய மக்கள் கட்சி                              நகரச் செயலாளர்  முஹம்மது நியாஸ் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகரங்ளில் ஒன்றாக முத்துப்பேட்டை திகழ்கிறது. இங்கு கோவிலூர் மந்திரிரபுரீஸ்வரர் கோவில், தில்லைவிளாகம் ராமர் கோவில், ஜாம்புவானோடை தர்ஹா, அலையாத்தி காடுகள் என பல சுற்றுலாதளங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அலையாத்தி காடுகளை சூழல் சுற்றுலாதளமாக அறிவித்து பணிகள் நடைபெற்று வருகிறது. முத்துப்பேட்டை நகருக்குள் அதிகளவில் வாகனப்போக்குவரத்துகள் இருந்து வருகிறது. குறிப்பாக அதிகளவில் மக்கள் வந்து செல்லும் பகுதியாக பழைய பேருந்து நிலையம், மன்னை சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, பட்டுக்கோட்டை சாலை போன்ற பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிது. பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்பதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேற்கண்ட பகுதிகளில்  சாலைகளில் ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் செம்படவன்காடு ஈ.சி.ஆர் இணைப்புச்சாலை முதல் ஆலங்காடு ஈ.சி.ஆர் இணைப்புச்சாலை வரை அதாவது முத்துப்பேட்டை வழி பட்டுக்கோட்டை சாலை, முத்துப்பேட்டை வழி மயிலாடுதுறை சாலை பல ஆண்டுகளாக சாலையை பராமரிக்காததால், சாலையில் புழுதி மணல்கள் நிறைந்து சாலை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. சாலைகளில் பேருந்துகள் மற்றும் மகிழுந்துகள் செல்லும்போது சாலைகளில் உள்ள புழுதி மணல் எழுப்பப்பட்டு இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், பாதசாரிகளும் நிலைதடுமாறும் அளவுக்கு உள்ளது. இதனால் மிகப்பெரிய மாசு ஏற்பட்டு ஆஸ்துமா மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாமலும் நிலைதடுமாறி பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தற்போது பருவமழை பெய்துள்ளதால் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்களில் செல்வோர்கள் நிலைதடுமாறி சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட சாலைகளில் தண்ணீர் தேங்காமல் தரமான சாலை அமைத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறும், சாலையோர நடைமேடை அமைத்து தர வேண்டும். இவ்வாறு தனது மனுவில் மனிதநேய மக்கள் கட்சி                              நகரச் செயலாளர்  முஹம்மது நியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Monday, January 11, 2016

வெளிநாடுவாழ் தமிழக மக்களின் நலன்காக்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்... மமக கோரிக்கை

வேலை நிமித்தமாகவும்,தொழில் நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக மக்களுக்கு உதவிகளையும்,வழிக்காட்டல்களையும் வழங்கவும்,அவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தனி அமைச்சகத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி ம.ம.க சார்பு அமைப்பான மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை சார்பில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை ம.ம.க பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி இன்று(10/01/2016)
தொடங்கி வைத்தார்.

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட நலவாரியம் செயல்படாத நிலையில்,கேரள அரசைப்போல தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டால்தான் வெளிநாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தமிழக மக்கள் பயனடைவார்கள் என பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி தொடக்க விழா நிகழ்ச்சியில் கூறினார்.

இக்கையெழுத்து இயக்கம் ஜனவரி 10 முதல் பிப்ரவரி 10 வரை ஒரு மாத காலம் நடைபெறும்.ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் அனைத்து தரப்பு தமிழக மக்களையும் சந்தித்து கையெழுத்து பெறுவது என்றும்,இதற்கு சமூக இனைய தளங்களில் பரப்புரை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது..

இந்நிகழ்ச்சியில் ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் ராசுதீன்,ம.ம.க பேரவையின் அமீரக மண்டல செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர்,அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் M.சுஹைபுதீன்,சமூக ஆர்வலர் P.சுல்தானுல் ஆரிப்,அமீரக மண்டல நிர்வாகிகள்,அபுதாபி மண்டல நிர்வாகிகள்,துபை மண்டல நிர்வாகிகள்,சார்ஜா மண்டல நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்துகொண்டனர்
-
ம.ம.க தலைமையகம்..

நன்றி:நீதியின் பக்கம் வாட்ஸ் அப் & பேஸ்புக்

நாச்சிகுளம் செய்திகள்

கடந்த வருடத்தில் 2 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் கொடுத்த திருச்சி பாஸ்போர்ட் ஆபீஸ்




திருச்சி: திருச்சி மண்டல பாஸ்போர்ட் ஆபீஸ் கடந்த ஆண்டில் 2,06,724 பாஸ்போர்ட்களை வினியோகித்துள்ளது.
தமிழக மத்திய மண்டலத்தில் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்தும் வகையில், 8 மாவட்டங்களுக்காக திருச்சியில் மண்டல பாஸ்போர்ட் சேவா கேந்திரம் அமைக்கப்பட்டது. சென்னை, திருச்சி தவிர, கோவை மற்றும் மதுரையிலும், மண்டல பாஸ்போர்ட் ஆபீஸ்கள் செயல்படுகின்றன.
திருச்சி அலுவலகத்திற்கு, கடந்த ஆண்டு 2,07,044 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 2,06,724 பேருக்கு பாஸ்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரூ.30,38,81,522 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மயிலாடுதுரை மற்றும் பெரம்பலூர் நகரங்களில் கடந்த ஆண்டு இரு பாஸ்போர்ட் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்போது 810 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 78 பாஸ்போர்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
என்ற தகவலை அதிகாரிகள் தெறிவித்துள்ளனர்


நாச்சிகுளம் செய்திகள்

Saturday, January 9, 2016

தமிழக அரசு வழங்கிய மிக்ஸி கிரைண்டர் பேனை வங்க மறுத்து திருப்பி அனுப்பி மக்களுக்கு தரமான கல்வி மற்றும் தரமான மருத்துவம் வழங்க கோரிக்கை


நாச்சிகுளம் உதயமார்தண்டபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் தகுதியுள்ள குடும்ப அட்டை அணைத்திற்கும்  தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் பேன் சமீபத்தில் வழங்கப்பட்டண பொதுமக்கள் அணைவரும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து பெற்று சென்றனர் 

 நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் தமிழக அரசின் விலையில்லா பொருட்களை வாங்க மறுத்து அரசுக்கு திருப்பி அனுப்பியதோடு மக்களுக்கு கல்வியையும் தரமான மருத்துவத்தையும் இலவசமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் 

நாச்சிகுளம் ஜமாத்தை சேர்ந்த  ஜெ.தாஹிர் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் திருவாரூர் மாவட்ட துனை தலைவராகவும் திருத்துறைபூண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளார் இவருடைய குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட அரசின் விலையில்லா பொருட்களை அரசுக்கே திருப்பி அனுப்பும் விதமாகவும் அனைத்து மக்களுக்கும்  தரமான கல்வியையும் தரமான மருத்துவ வசதியையும் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்க மனுவை வட்டாச்சியருக்கு அனுப்பியுளளார் 

இந்த பகுதியின் முக்கிய பிரமுகரான தாஹிர் நீண்ட நாட்களாக கருனை இல்லம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்திவரும் இவர்  ராஜீவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க தஞ்சை மண்டல ஒருங்கினைப்பாளராகவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது 

இலவசமே விலையில்லா பொருளாக மாறி உள்ளதாகவும் அந்த இலசங்களை பெறுவதில் தனக்கு விருப்பமில்லை என்றும் ஆனால் மக்களின் முன்னேற்றதிற்கு தரமான இலவச கல்வியும் மக்களின் ஆரோக்கியத்திற்கு தரமான இலவச மருத்துவமும் அரசு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்

நாச்சிகுளம் செய்திகள்

Friday, January 8, 2016

ஜன.8 வங்கி ஊழியர்கள் போராட்டம்.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கும்..!

மும்பை: பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்ட விதிமுறைகளை, இதன் 5 கிளை வங்கிளுக்கு அமலாக்கம் செய்யவதை எதிர்த்து ஜனவரி 8ஆம் தேதி (இன்று) வேலை நிறுத்தபோராட்டத்தில் பங்கேற்க வங்கி ஊழியர்களுக்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசு வங்கிகளுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 8 ஆம் தேதி வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் மூலம் 3 நாள் தொடர்ந்து வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் வழக்கம்போல் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்டம் அதன் கிளைகளான ஸ்டேட் பாங்க் ஆஃ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதெராபாத், ஸ்டேட் வங்கி திருவாங்கூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃ பாட்டியாலா ஆகிய வங்கிகளுக்கும் அமலாக்கம் செய்யப்படுவது குறித்துத் தலைமை தொழிலாளர் ஆணையரிடம் கடந்த வாரம் AIBEA அமைப்பின் எதிர்ப்புகளைத் தெரிவித்தது.
இதற்கான பேச்சுவார்த்தையில் தோல்வியைச் சந்தித்த நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் AIBEA அமைப்பு அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்டத்தின் மூலம் தனது கிளை வங்கி ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைப் பளு, கூடுதல் வேலைநேரம், அவுட்சேர்சிங் பணிகளை எனப் பலவற்றில் பதிப்புகள் உள்ளதாக AIBEA அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்புதிய திட்டத்தை அமலாக்கம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், கிளை வங்கிகளுக்கு இத்திட்ட செயல்முறையை மாற்றி வடிவமைக்கும் கோரிகைகளைத் தலைமை தொழிலாளர் ஆணையர் மறுத்துள்ள நிலையில் இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்டம் IBA மற்றும் AIBEA அமைப்புகள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளதாகவும் AIBEA அமைப்பு தெரிவித்துள்ளது.

நாச்சிகுளம் செய்திகள்

Thursday, January 7, 2016

வேலைவாய்ப்பு:- பெல் நிறுவனத்தில் பணியாற்ற அழைப்பு

சென்னை: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) என்ஜினீயரிங் அசிஸ்டெண்ட் டிரைனி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்களிடமிருந்து இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை ஜனவரி 23-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. பெல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 தொழிற்சாலைகள் உள்ளன. இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான நவீன எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரித்து அளிக்கிறது பெல்.
இந்த நிறுவனத்தில் என்ஜினீயரிங் அசிஸ்டெண்ட் டிரைனி பதவிக்கு 14 இடங்களும், டெக்னீஷியன் பிரிவில் 15 இடங்களும், கிளார்க் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணிக்கு 3 இடங்களும் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் தபால் மூலம் விண்ணப்பங்கலை ஜனவரி 23-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Manager (HR/Central), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru 560 013.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300. பணியிடங்களுக்கான அட்மிட் கார்டுகள் பெல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bel-india.com-ல் காணலாம்.


நாச்சிகுளம் செய்திகள்

கபரஸ்தான் இடத்தை மீட்டுத்தரக்கோரி கமிஷனரிடம் கோரிக்கை

சென்னை வேளச்சேரி_தரமணி நூறடிசாலையில் பிளாட் (எண் 39, வார்டு எண் 179,மண்டலம் 13,சர்வே எண் 150 ல் உள்ள)50 செண்ட் கொண்ட ருத்ரமயமான பூமி கடந்த 2000 ஆம் ஆண்டு முஸ்லிம் ஜமாத்தார்களுக்கு இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் அடக்கஸ்தலமாக ஒதுக்கப்பட்டது.சமூக விரோதிகள் சிலரின் எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக அது பயன்படுத்த முடியாமல் போனது.

இதற்கிடையில் 22_05_2013 ல் மாநகராட்சி மூலம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த 50 செண்ட் இடம் முஸ்லிம் ஜமாத்தார்களுக்கே என மீண்டும் உறுதி செய்யப்பட்டது.மீண்டும் சமூக விரோதிகள் தொல்லைகளால் இறந்த முஸ்லிம்களின் உடல் அடக்கம் செய்யப்பட முடியாமல் போனது.

இதனால் ஜமாத்தார்கள் சமூக ஆர்வலர் கோட்டூர் ரபீக் அவர்கள் மூலம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.அதன்படி இப்பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கடந்த 18_12_15 அன்று நீதியரசர் T.S .சிவஞானம் அவர்கள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு ஜமாத்தார்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.a.r.l.சுந்தரேசன் அவர்கள் வாதாடினார்.

இறுதியில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் இடத்தை சுத்தம் செய்து, போலீஸ் பாதுகாப்புடன்  ஜமாத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை செயல்படுத்துமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையரை  கேட்டுக்கொள்வதற்காக ஜமாத்தினரின் வேண்டுகோளை ஏற்று #மனிதநேய_மக்கள்_கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில செயலாளர் நிஜாமுதீன்,இந்திய தேசிய லீக் சார்பில் பஷீர் அஹமது,சமூக ஆர்வலர் கோட்டூர் ரபீக் மற்றும் இப்ராகிம்மக்கி,முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் இன்று காவல்துறை ஆணையரை சந்தித்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

சமுதாய கட்சிகளான #மனிதநேய_மக்கள்_கட்சி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,இந்திய தேசிய லீக் மூன்று கட்சிகளும் இணைந்து இந்த விசயத்தில் காவல்துறை ஆணையரை  சந்தித்திருப்பது பொதுமக்களால் பாராட்டப்படுகிறது.

குறிப்பு:

இந்த அடக்கஸ்தலத்தை சார்ந்து அடையாறு முதல் வேளச்சேரி வரை 50 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

என்எல்சி-யில் வேலைவாய்ப்பு !


      சென்னை: நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில்(என்எல்சி) 100 கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் டிரைனி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
தகுதியும், திறமையும் வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கன்ட்ரோ அண்ட் இன்ட்ஸ்ருமென்டேஷன், மைனிங், கம்ப்யூட்டர் பிரிவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுபப்பவேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் The General Manager (Hr), Recruitment Cell, Human Resource Department, Neyveli Lignite Corporation Limited, Corporate Office, Block-1, Neyveli - 607801, Tamilnadu. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு என்எல்சி-யின் இணையதளமான https://www.nlcindia.com/-ல் தொடர்புகொள்ளலாம்


நாச்சிகுளம் செய்திகள்

Monday, January 4, 2016

மறக்கப்பட்ட சுதந்திரப்போராட்ட வீரர் அமீர்ஹம்ஸா !

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பரும் , அவர் கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்தின் (INA) வீரர்களில் ஒருவருமான தியாகி அமீர் ஹம்ஸா அவர்கள் நேற்று இரவு காலமாகி , இன்று 4:30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது .

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்திலிருந்து பர்மாவுக்கு சென்று வணிகம் செய்த குடும்பத்தில் பிறந்தவர் . இளம் வயதில் ரங்கூன் வீதிகளில் வலம் வந்தவர் . நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியால் ஈர்க்கப்பட்டார் .

ஐரோப்பாவிலிருந்து ரகசிய நீர்மூழ்கி கப்பலில் சிங்கப்பூருக்கு வந்திறங்கிய நேதாஜி , அங்கு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார் . பிறகு தாய்லாந்து வழியாக பர்மா தலைநகர் ரங்கூனுக்கு வந்து சேர்ந்தார் . 

அப்போது பர்மா வாழ் தமிழர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தனர் . அலை , அலையாய் அவரது இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தனர் . 

அப்போது ராணுவ நிதி வசூலிப்பில் நேதாஜி தீவிரமாக இறங்கினார் . நேதாஜிக்கு கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் ஏலம் விடப்பட்டன . அப்போது நேதாஜிக்கு விழுந்த மாலையை ராணுவ நிதிக்காக 2 லட்சம் ரூபாய்க்கு அமீர் ஹம்ஸா ஏலம் எடுத்தார் . அக்காலத்தில் 2 லட்சம் ரூபாய் எனில் இப்போது அது 10 கோடியாக மதிப்பிடலாம் . 

இதனால் நேதாஜியின் தனிப்பட்ட அன்புக்கு உள்ளானார் . INA படையில் இணைந்து மணிப்பூர் எல்லையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததும் , நேதாஜி மர்மமான முறையில் காணாமல் போனார் . INA படையின் போராட்டமும் முடிவுக்கு வந்தது . 

ஆங்கிலேயர்களினால் கைது செய்யப்பட்ட அமீர் ஹம்ஸாவுக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது . காந்தி , ஜின்னா , நேரு ஆகியோரின் முயற்சியால் இவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது . 

நாட்டுக்காக போராடிய இவரது சொத்துக்களும் , வணிகமும் இல்லாமல் போனது . பிறகு சென்னையில் குடியேறியவர் வறுமையோடு வாழ்ந்துக் கொண்டிருந்தார் . 

இவரைப் பற்றி கேள்விபட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னால் வட சென்னையில் உள்ள எளிமையான அவர் வீட்டுக்குச் சென்று உணர்வு பத்திரிக்கைக்காக சிறப்பு பேட்டி எடுத்தேன் . அதன் பிறகுதான் இப்படியொரு தியாகி இருப்பது சமுதாயத்திற்கு தெரிய வந்தது .

அதன்பிறகு நான்கு அல்லது ஐந்து முறை அவரை சந்தித்துள்ளேன் . ஒவ்வொரு முறையும் பர்மாவை பற்றியும் , விடுதலைப் போராட்ட நினைவுகள் குறித்தும் உற்சாகமாக பேசுவார் . 

நேதாஜியை பற்றி கூறும்போதெல்லாம் உணர்ச்சி வசப்படுவார் . அவரைப் பற்றிய பல அபூர்வ செய்திகளை கூறுவார் . அதில் ஒன்று ஜின்னா அவர்கள் நேதாஜிக்கு எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க கடிதமாகும் . “ நேதாஜி அவர்களே … உங்கள் தலைமையில் இந்தியா விடுதலை பெறுமேயானால் … நான் தனிநாடு கோரிக்கையை கைவிடுவேன் “ என்று ஜின்னா எழுதியிருந்ததை அமீர் ஹம்ஸா அவர்கள் என்னிடம் கூறினார் . 

பர்மாவில் நகைக்கடை வைத்திருந்த அவர் நாட்டு விடுதலைக்காக எல்லாவற்றையும் இழந்து தியாகி பென்ஷனுடன் வாழ வேண்டிய நிலைக்கு ஆளானார் . அவரது உறவினர்கள் சாதாரணமாகவே வாழ்கின்றனர் . 

சுதந்திரத்தின் பலன் மக்களுக்கு போய் சேராமல் , சுரண்டல்வாதிகளின் கைகளுக்கு போய்விட்டதே என வருந்தினார் . 

தியாகிகளுக்கு ஒதுக்கப்படும் அரசு உரிமைகளுக்காக பல அரசியல் தலைவர்களின் வீடுகளில் ஏறி இறங்கியதுதான் மிச்சம் .

நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களும் , நாட்டை சுரண்டிக் கொண்டிருப்பவர்களும் நிறைந்த சூழலில் , அவரது மரணம் கூட கண்டுக் கொள்ளப்படவில்லை . 

நாட்டுக்காக போராடிய அந்த தியாகிக்கு அரசு மரியாதை அல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் ?

இறைவனிடம் சென்றிருக்கும் தியாகி அமீர் ஹம்ஸா அவர்களே …
 உங்கள் வரலாற்றை பேரப்பிள்ளைகள் நாங்கள் முன்னெடுப்போம் !
 உங்கள் தியாகத்தை தேசப்பற்றோடு பரப்புரை செய்வோம் !

M.தமிமுன் அன்சாரி 
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

முத்துப்பேட்டை பத்திரிக்கையாளர் சங்க அலுவலகத்திற்கு மமக பொதுச்செயலாளர் வருகை!


முத்துப்பேட்டை யில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் பத்திரிக்கையாளர் சங்க புதிய அலுவலகத்திற்கு மமக பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி வருகை தந்தார்.

அவருடன் மாநில துணை அமைப்புச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை H.சேக் அப்துல்லாஹ் ஆகியோரும் வருகை தந்தனர். அப்போது பத்திரிகை யாளர்களும்,பல்வேறு கட்சிகளை சார்ந்த நண்பர்களும் அவரை வரவேற்றனர்.




முதுபெரும் இடதுசாரி தலைவர் A.P.பரதன் மறைவு - மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! (மமக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை)


சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றியவருமான மூத்த இடதுசாரி தலைவர் A.P.பரதன் அவர்கள் காலமானர் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.நாடு ஒரு நல்ல தலைவரை இழந்திருக்கிறது.

ஒன்றுபட்ட இந்தியாவின் வங்க மாநிலத்தில் பிறந்த இவரது வாழ்க்கை, மஹாராஷ்டிராவில் தான் வளர்ந்தது. இவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவராக உருவெடுத்தார். அப்போது நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் போட்டியிட்டு V.C.ஷுக்லாவை தோற்கடித்தார். இவரிடம் தோற்ற V.C.ஷூக்லா தான் பின்னாளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வனார்.

மாணவர் அரசியலில் தீவிரமாக பணியாற்றிய இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான அகில இந்திய மாணவர் பேரவையின்(AISF) தேசிய செயலாளராகவும் பணியாற்றினார்.

தொழிற்சங்கவாதியாகவும், உழைக்கும் மக்களின் போரளியாகவும் பொது வாழ்க்கையை நகர்த்தியவர், வாழ்வின் எந்த காலகட்டத்திலும் கொள்கைக்காக சமரசம் செய்துக்கொள்ளாதவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு தொழிற்சங்க பிரிவான AITUC-யின் அகில இந்திய பொதுச் செயலாளராக பணியாற்றிய போது தொழிலாளர்களுக்காக வலிமை மிக்க போராட்டங்களை முன்னெடுத்தார். தொழிலாளர்கள், பின்தங்கிய மக்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்காக வாழ்நாள் முழுவதும் போராடினார்.

RSS அமைப்பின் தலைமையகம் செயல்படும் நாக்பூரில் வளர்ந்த காரணத்தினாலோ : என்னவோ, மதவெறி சக்திகளுக்கு எதிராக தீவிரமாக இயங்கினார். இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதிலும், அது குறித்த விவாதங்களை எழுப்புவதிலும் அக்கறை காட்டினார். இவர் நாடாளுமன்றதுக்கு சென்றிருந்தால், பல திருப்புமுனைகளை ஏற்படுத்திருப்பார்.
  
எனினும் மராட்டிய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் அவர் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் ஆவணங்களாகும்.

நான் டில்லி செல்லும் தருணங்களில், அவரை இரண்டு முறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது சச்சார் கமிட்டி   பரிந்துரைகள் குறித்தும் , நாடு முழுக்க விசாரனையின்றி சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களின் நிலை குறித்தும் அவருடன் உரையாடிய நினைவுகள் மறக்க முடியாதவை. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக பணியாற்றிய இந்திரஜித் குப்தாவின் வழியில் 1996 முதல் 2008 வரை பன்னிரண்டு ஆண்டு காலம் கட்சியை வழிநடத்திய அவரது இழப்பு இடதுசாரி தோழர்களுக்கு ஈடுசெய்ய முடியாதது ஆகும். அவரது இழப்பில் வாடும் அனைவருக்கும்  மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இவண்

M.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
03-01-2015

Friday, January 1, 2016

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்து தமிழ் சினிமாவில் முதலீடு செய்த வருமான வரி அதிகாரி


சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்து, கோடிக்கணக்கான ரூபாயை தமிழ் சினிமாவில் முதலீடு செய்துள்ளார் வருமான வரி ஆணையர் கிருஷ்ணசாமி.
நேற்று அவரது வீடுகளில் சிபிஐ நடத்திய அதிரடி சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, சென்னை மண்டல வருமாய் வரித்துறை ஆணையர் கிருஷ்ணசாமியின் சென்னை மற்றும் பழநி அருகேயுள்ள ஆயக்குடி உள்ளிட்ட அவரது வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
வீட்டில் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஆயக்குடி என்ற பெயரில் அவர் நடத்தி வந்த நிறுவனங்களிலும் சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதில் கிருஷ்ணசாமி தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் வருமானத்திற்கு அதிகமாக 6.1 கோடி ரூபாய் அவர் சொத்து சேர்த்திருப்பதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: tamil.oneindia.com