
Saturday, December 4, 2010
Tuesday, November 30, 2010
Thursday, November 25, 2010
Tuesday, September 7, 2010
திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு

இந்த தொழுகையின் போது கிராம ஜமாத்தாருக்கும், தவ்ஹித் ஜமாத்தாருக்கும் இடையே தொழுகை முறையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
இதனால் பொது இடத்தில் தனியாக தொழுகை நடத்துவதற்கு தவ்ஹித்ஜமாத்தார் ஏற்பாடு செய்துவந்தனர்.
இது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கிராம ஜமாத்தார்கள், தவ்ஹித் ஜமாத்தார் நிர்வாகிகளிடம் கேட்டபோதுமீண்டும் மோதல் வரும் சூழல் ஏற்பட்டது.
இதனால் நேற்று தவிஹித் ஜமாத் பிரமுகர்கள்,கிராம ஜமாத்தாரை நேரில் சந்தித்து விவாதித்தபோது விவாதம் முற்றி கைகளப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கைகளப்பு இரவு வரை நீடித்துள்ளது. தொடர்ந்து தவ்ஹித்ஜமாத்தாருக்கு ஆதரவாக வந்த திருமங்களக்குடி ஹாஜி முகம்மது,பிரச்சனை பெரிதானதும் தனது இரு கைத்துப்பாக்கியை எடுத்து எதிரில் நின்ற கிராம ஜமாத்தார் மீது 12 முறை சுட்டிருக்கிறார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கிராம ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில், கமிட்டி உறுப்பினர் ஹச்முகமது ஆகிய இருவர் பலியானார்கள்.
5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தால் இருதரப்பினருக்கும் இடையே மேலும் மோதல் முற்றியுள்ளது. இந்த மோதலால் 10க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த எஸ்.பி.மூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
இதஜ இஃப்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர் காதர் முஹைதீன்!

இதஜ தலைமையகத்தில் “இஃப்தார்” எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றும் மேற்ப்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் சமுதாய தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். அவ்வரிசையில் தேசியலீக் கட்சியின் தலைவர் பஷீர் அஹ்மது அவர்கள், சமுதாய பிரமுகர் அப்போலா ஹீனிஃபா அவர்கள் கலந்து கொண்டர்கள்.
அவ்வாறே சென்ற 27.08.2010 அன்று தமுமுகவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.

அவரைத் தொடர்ந்து முஸ்லிம்லீக் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்கள் நம் அழைப்பை ஏற்று இதஜ தலைமையத்திற்கு வருகை தந்தார். அவர்களை நம் மாநிலத் தலைவர் பாக்கர், துணைத் தலைவர் முனீர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட காதர் முஹைதீன்
Thursday, July 29, 2010
பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்
.இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூட ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என் பது சர்வதேச விதியாகும்.ஆனால், கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகால மாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.கடந்த ஜூலை 24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் பாஜகவினர் இதே கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது தமுமுகவின் ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்திருக்கிறது. ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும், வேகமாக வருமாறு அதில் வேண்டியதால், தமுமு கவின் ஆம்புலன்ஸ் டிரைவர் தாஜுதீன் வேகமாக ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்பு லன்ஸை திருப்பினார். வரும் வழியில், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியை மெல்ல இரண்டா வது கியரில் நகர்த்தியிருக்கிறார்.அப்போது காவல் துறையும் கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத் தியுள்ளது. பாஜக தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் தனது தொண்டர்களிடம் ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு அறிவித்திருக்கிறார்.எந்த விதி மீறலும் இல்லாமல், யாருக்கும் இடையூறு இல்லாமல் ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்பு லன்ஸ் சென்றுவிட்டது.மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்று விட்டார்.அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில், ஆம்புலன்ஸை கட்டைகளால் உடைத்து, டிரைவரை கொலை வெறியுடன் தேடி உள்ளனர். டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல் டேங்கை உடைத்து, வண்டியை துவம்சம் செய்ய, இதைப் பார்த்த பொதுமக்கள் சப்தம் போட, அதற்குள் ஓடிவந்த காவல் துறையினர் பாஜகவினர் மீது தடியடி நடத்தியதும், வன்முறை கும்பல் ஓடத் தொடங்கியது.அதற்குள் பாஜகவினர் தங்கள் அயோக்கியத்தனத்தை மறைக்க, ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும் விதமாக வந்தது என வதந்திகளை பரப்பினர்.ஏற்கனவே அங்கு SP முகாமிட்டு இருந்ததால், அவர் தலைமையிலான போலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங் களையும் உடைத்தனர்.போலிசார் துரத்த தொடங் கியதும் பாஜகவினர் கொடிகளை போட்டுவிட்டு, வேனில் கட்டியி ருந்த கொடிகளை அவிழ்த்துவி ட்டு ஓடத் தொடங்கினர்.தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப் பட்ட செய்தி அறிந்ததும் திருத்து றைப்பூண்டி நகர தமுமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மாவட்ட தலைவர் தாஜுதீன், ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ், யூசுப் உள்ளிட்டோர் தலைமையில் சாலை மறியலில் தமுமுகவினர் இறங்க, பிறகு வழக்கு தொடுத்து விட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.அதற்குள் நாச்சிக்குளம், கட்டி மேடு வழியாக பாஜகவினர் வாகனங்களில் திரும்பியதை தமுமுகவினர் அவர்களை மறிக்க புறப்பட்டனர்.இதையறிந்த காவல்துறையினர் மாவட்ட தலைவர் தாஜுதீன் மூலம், தயவு செய்து பதிலடி கொடுக்காதீர்கள் எனக் கெஞ்ச, அதன்படி தாஜுதீன் நாச்சிக்குளம், கட்டிமேடு தமுமுகவினரை மறிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.செய்தியறிந்து திருவாரூர் மாவட்ட தமுமுகவினர் திருத்து றைப்பூண்டி நோக்கி விரைந்தனர். திருத்துறைப் பூண்டி நகரெங்கும் பாஜகவினரை பொதுமக்கள் காறித்துப்பாத குறையாக திட்டிக் கொண்டிருந்தனர்.இதே, ஆம்புலன்ஸை பலமுறை பாஜகவினர் அவசரத்துக்கு பயன் படுத்தியது திருத்துறைப் பூண்டி மக்களுக்கு நன்கு தெரியும். இப்போது கூட ஒரு இந்து சமுதாய குடும்பத்துக்கு உதவதான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது என திருத்துறைப்பூண்டி மக்கள் மூலைக்கு மூலை பேசிக் கொண்டிருக்கின்றனர்.காவல்துறை பாஜகவினரை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பிலிருந்தே அழுத்த ங்கள் அதிகரிக்க, அனைத்துக் கட்சியினரும் இந்த அராஜகத்தை கண்டித்து, தமுமுகவினருக்கு ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.அடுத்த நாள், மமக துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்கு வந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.குற்றவாளிகள் பிடிக்கப்படாத தை கண்டித்து திருவாரூரில் ஷிறி அலுவலகம் நோக்கி கறுப்புக்கொடி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.ஞிமிநி அவர்கள் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும், மற்ற அதிகாரிகள் மமக துணைப் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்கு வரும் தினத்தில் கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும், ஜூலை 30க்குள் குற்றவாளிகளை பிடிக்கிறோம் என்று கூறியதால், ஜூலை 31 அன்று கறுப்புக் கொடி ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.ஈவு, இரக்கமற்ற பாஜக வன்முறை கும்பலின் செயல் பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரை தமிழகமெங்கும் கொந்தளிக்க வைத்துள்ளது.தமுமுகவினர் இதுவரை ஜனநா யகத்தை மீறவில்லை. காவல்துறை தனது கடமையை வாக்களித்தப்படி செய்யாவிடில், அதன் பின் விளை வுகளுக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். கார ணம், எங்களின் ஒவ்வொரு ஆம் புலன்ஸும் எங்களது ரத்தம், வியர்வையினால் ஓடிக் கொண் டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீது விழுந்த தாக்குதல், எங்கள் நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்கு தல்களாகும். பொன்ராதா கிருஷ்ணன், கறுப்பு (எ) முருகானந்தம் கைதாவார்களா?திருத்துரைப்பூண்டி காவல் நிலையத்தில் புகுந்து உள்ளி ருப்புப் போராட்டம் நடத்தி, தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது பொய் வழக்கு போட வைத்தும், பா.ஜ.கவினரை கைது செய்யக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர் பா.ஜ.க. தலை வர் பொன் ராதாகிருஷ்ணணும், கறுப்பு (எ) முருகானந்தம் மற் றும் பா.ஜ.கவினரும்.காவல் நிலையத்திற்குள் புகுந்து இத்தகைய அத்துமீறல்களைச் செய்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை. இல்லையெனில் இதே நடைமுறையை எல்லாக் கட்சியினரும் பின்பற்ற ஆரம் பித்து விடுவார்கள்.திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் படாவிடில், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முக்கிய வழக்கு ரைஞர்கள் முயற்சி எடுக்கின்றனர்.ஒத்திவைக்கப்பட்ட கறுப்புக்கொடி ஊர்வலம்தமுமுக ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கிய அநியா யக்கார பா.ஜ.க குண்டர் களை கண்டித்தும், காவல் துறை அவர்களைக் கைது செய்யாததைக் கண்டித்தும், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் (ஷிறி) அலுவலகம் நோக்கி தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் ஜூலை 27 அன்று கறுப்புக்கொடி ஊர்வலம் நடத் துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.தமுமுக தொண்டர்களும், ஜமாஅத்தினரும் இந்த ஊர்வ லத்தில் ஆயிரக்கணக்கில் திரளப் போகும் தகவலை உளவுத் துறையின் மூலம் தெரிந்து கொண்ட உயரதிகாரிகள் தமுமுக தலைமை நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர். மாவட்டப் பொறுப்பாளரும், மாநிலச் செயலாளருமான பேரா.ஹாஜாகனி குற்றவாளிகளைக் கைது செய்தால் இந்த ஊர்வலத்தை நிறுத்தி விடலாம் என மாவட்ட ஷிறி&யிடம் தெரிவித்தார். தமிமுன் அன்சாரியும் இதே பதிலைக் கூறினார். பொதுச்செயலாளர், ஊர்வலம் என் தமையில் தான் நடக்கப் போகிறது. நீங்கள் என்னைக் கைது செய்தாலும் பராவாயில்லை. ஊர்வலத்தை நடத்துவோம் என்றார். பிறகு SP, DIG உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பொதுச் செயலா ளரைத் தொடர்பு கொண்டு 27&ந் தேதி முதலமைச்சரின் திருவா ரூர் வருகை முடிந்தவுடன் கண்டிப்பாக குற்றவாளிகளைக் கைது செய்வோம் என உறுதிய ளித்தனர். அதைத் தொடர்ந்து கறுப்புக் கொடி ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Saturday, July 24, 2010
Tuesday, June 29, 2010
Saturday, May 29, 2010
Saturday, May 22, 2010
தர்போதைய சியா அனி விவரம்
Thursday, May 6, 2010
கிரிகட்டில் கலக்கும் நாச்சிகுளதில் சியா அனியினர்

சியா அனி வீரர்கல் விவரம்....
Sunday, May 2, 2010
கோடையில் குலு குலு மலை
மழை அதிஹம் பெய்த இடங்கல் மயிலாடுதுரை, சிதம்பரம், திருனெல்வேலி

















