SALAAM

live tv

Thursday, January 7, 2016

கபரஸ்தான் இடத்தை மீட்டுத்தரக்கோரி கமிஷனரிடம் கோரிக்கை

சென்னை வேளச்சேரி_தரமணி நூறடிசாலையில் பிளாட் (எண் 39, வார்டு எண் 179,மண்டலம் 13,சர்வே எண் 150 ல் உள்ள)50 செண்ட் கொண்ட ருத்ரமயமான பூமி கடந்த 2000 ஆம் ஆண்டு முஸ்லிம் ஜமாத்தார்களுக்கு இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் அடக்கஸ்தலமாக ஒதுக்கப்பட்டது.சமூக விரோதிகள் சிலரின் எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக அது பயன்படுத்த முடியாமல் போனது.

இதற்கிடையில் 22_05_2013 ல் மாநகராட்சி மூலம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த 50 செண்ட் இடம் முஸ்லிம் ஜமாத்தார்களுக்கே என மீண்டும் உறுதி செய்யப்பட்டது.மீண்டும் சமூக விரோதிகள் தொல்லைகளால் இறந்த முஸ்லிம்களின் உடல் அடக்கம் செய்யப்பட முடியாமல் போனது.

இதனால் ஜமாத்தார்கள் சமூக ஆர்வலர் கோட்டூர் ரபீக் அவர்கள் மூலம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.அதன்படி இப்பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கடந்த 18_12_15 அன்று நீதியரசர் T.S .சிவஞானம் அவர்கள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு ஜமாத்தார்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.a.r.l.சுந்தரேசன் அவர்கள் வாதாடினார்.

இறுதியில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் இடத்தை சுத்தம் செய்து, போலீஸ் பாதுகாப்புடன்  ஜமாத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை செயல்படுத்துமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையரை  கேட்டுக்கொள்வதற்காக ஜமாத்தினரின் வேண்டுகோளை ஏற்று #மனிதநேய_மக்கள்_கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில செயலாளர் நிஜாமுதீன்,இந்திய தேசிய லீக் சார்பில் பஷீர் அஹமது,சமூக ஆர்வலர் கோட்டூர் ரபீக் மற்றும் இப்ராகிம்மக்கி,முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் இன்று காவல்துறை ஆணையரை சந்தித்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

சமுதாய கட்சிகளான #மனிதநேய_மக்கள்_கட்சி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,இந்திய தேசிய லீக் மூன்று கட்சிகளும் இணைந்து இந்த விசயத்தில் காவல்துறை ஆணையரை  சந்தித்திருப்பது பொதுமக்களால் பாராட்டப்படுகிறது.

குறிப்பு:

இந்த அடக்கஸ்தலத்தை சார்ந்து அடையாறு முதல் வேளச்சேரி வரை 50 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

No comments:

Post a Comment