SALAAM

live tv

Friday, March 18, 2016

நாச்சிகுளம் மில்லிணியம் மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா



Nachikulam News Mar18  3:13PM
நாளைய தினம் 19/3/2016 சனிக்கிழமையன்று
நாச்சிகுளம் மில்லிணியம் மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற உள்ளன காலை 9 மணியளவில் பள்ளி மாணவ மாணவிகள் பங்குகொண்ட  அணிகளின் கொடிகளை ஏற்றுவதோடு தொடங்கும் நிகழ்ச்சிகள்

 பள்ளி  மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் 
பள்ளியின் ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டிகளும்  பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளன 

அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதலும் பள்ளி  மாணவ மாணவிகள் பங்கு பெறும் கலாச்சார  கலைவிழா நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றன 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முன்சிப் நீதிபதி மேதகு, திருமதி.M.மஹாலட்சுமி  B.A., B.L., அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் அணைவரும் வருக வருக என்று
அழைத்து மகிழ்வது
பள்ளி மாணவ மணவிகள்
ஆசிரியை பெருமக்கள் மற்றும்
பள்ளி நிர்வாகம்
மில்லிணியம் 
மெட்ரிகுலேசன் பள்ளி
நாச்சிகுளம்


நாச்சிகுளம் செய்திகள்

Wednesday, March 16, 2016

#ஒரு_வரலாறு_உருவாகிறது.! (மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி கடிதம்)



பேரன்புக்குரிய மனிதநேய சொந்தங்களே ..
ஏக இறைவனின் அமைதியும் , சமாதானமும் உரித்தாகுக !

உயிருக்குயிரான உங்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என்று பல நாட்களாக முயன்று , அது இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது . 

கடுமையான மன அழுத்தங்கள் , ஓய்வற்ற பயணங்கள் , இடைவிடாத அலைப்பேசி அழைப்புகள் , தொடர்ந்து நிகழும் மக்கள் சந்திப்புகள் என தினமும் இயங்க வேண்டியிருக்கிறது . 

அவற்றுக்கு மத்தியில் தான் ஒரு நள்ளிரவில் இம்மடலை வரைகிறேன் . உங்களோடு பேசும்போதும் , உங்களுக்காக உழைக்கும் போதும் , உங்களுக்காக எழுதும் போதும் மனமும் ,உடலும் சோர்விலிருந்து விடுபட்டு சிறகு முளைத்த மகிழ்ச்சியில் குதூகலிக்கிறது என்பதே உண்மை . 

#சொந்தங்களே…!

கடந்த அக்டோபர் 6 - 2015 தொடங்கி நாம் நடத்தி வந்த உட்கட்சி ஜனநாயகத்திற்கான போராட்டம் கடந்த பிப்ரவரி 25 – 2016 அன்றுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது .  

எத்தனையோ உண்மைகளும் , நியாயங்களும் புதைக்கப்படலாம் . ஆனால் நியாய தீர்ப்பு நாளில் இறைவனுக்கு முன்னால் அவற்றை நாம் முன்னிறுத்துவோம் . இந்த 4½ மாதங்களில் வன்முறைகள் , அவதூறுகள் , அராஜகங்கள்  ஆகியவற்றை துணிச்சலோடு எதிர்கொண்டோம் . நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தோம் . இப்போது புதிய பாதை ; புதிய பயணம் என்ற முழக்கத்தோடு புறப்பட்டிருக்கிறோம் .

இறையருளால் கடந்த பிப்ரவரி 28 – 2016 அன்று நாம் மனிதநேய ஜனநாயக கட்சியை கும்பகோணத்தில் தொடங்கி , அன்று இரவே அய்யம்பேட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து சிறுத்தையின் வேகத்தோடு பயணத்தை தொடங்கிவிட்டோம் .

கொந்தளிப்பான கடல்தான் மிகச்சிறந்த மாலுமிகளை உருவாக்கும் . அடக்குமுறைகளில்தான் புரட்சிகள் உருவாகும் .

ஆம் ! நாம் சந்தித்த நெருக்கடிகள் தான் இன்று புதிய பாதையில் புதிய பயணத்தை திசைக்காட்டியிருக்கிறது . 

#சொந்தங்களே…! 

தார்குச்சிகளால் நீல வானத்தை கிழித்துவிட முடியாது . உமிழ் நீரால் எரிமலையை அணைத்துவிட முடியாது . அதுபோலவே துரோகங்களாலும் , அவதூறுகளாலும் நம்மை அழித்துவிட முடியாது என்பதை இறையருளால் நிரூபித்திருக்கிறோம் . 

இதோ … ஊரெங்கும் பேரெழுச்சியை பார்க்கிறோம் . கருப்பு , வெள்ளை , மற்றும் கருஞ்சிவப்பில் நட்சத்திரம் பொறித்த நம் கொடியை ஊர்வலமாய் முன்னெடுத்துச் செல்லும் ஜனநாயகப் போராளிகளின் தீரச்செயல்களை மெய்சிலிர்ப்போடு பார்க்கிறோம் .!

ஒரு வசந்தத்தின் இடி முழக்கமாய் ; மாபெரும் மறுமலர்ச்சியின் முன்னோட்டமாய் ; மஜகவின் பயணத்தை மக்கள் வரவேற்கிறார்கள் .

கட்சியின் பெயரும் , கொடியும் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டு எழுச்சிமிகு அய்யம்பேட்டை பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டதும் நமது சொந்தங்கள் 24 மணி நேரத்தில் சமூக இணையதளங்கள் வழியாக அதை உலகமெங்கும் கொண்டு சேர்த்த சாதனை அளப்பரியதாகும் . 

அடுத்த நாளே மோட்டார் பைக்குகளில் ஸ்டிக்கர் கொடிகள் ஒட்டப்பட்டன . கார்களில் கொடிகள் பறந்தது . கம்பங்களில் கொடிகள் ஏறின . போர் வீரர்களைப் போல மனிதநேய சொந்தங்கள் கொடியை அறிமுகப்படுத்திய வேகம் இதுவரை தமிழகம் கண்டிராத சான்றாகும் . 

ஒரு நாடு விடுதலையடைந்தால் , அம்மக்கள் எப்படி கொண்டாடுவார்களோ ; குதூகலிப்பார்களோ ; அதுபோல நமது கொடியை ஏற்றிப் போற்றினார்கள் என்றால் அது மிகையாகாது . 

நமது கட்சியை நோக்கி அலை , அலையாய் திரண்டு வரும் மாணவர்களையும் , இளைஞர்களையும் மட்டுமல்ல எக்கட்சியை சாராத பொதுமக்களும் , புதியவர்களும் பெரும் நம்பிக்கையோடு இணைவதையும் யாராலும் தடுக்க முடியவில்லை . 

ஈர்ப்புமிக்க துடிப்பான தலைமை தங்களுக்கு கிடைத்திருப்பதாக அவர்கள் கருதி ஓடிவருகிறார்கள் . பாலைவனத்தில் நிழல்தேடி அலைந்த பயணிகளைப் போல, நம்மை தேடி வருகிறார்கள் . 
  
நமக்கு பெரும் ஆச்சர்யம் என்னவெனில் , 15 வயது சிறியவர்களிடம் கூட நமது கட்சி ஏற்படுத்தியிருக்கும் அரசியல் தாக்கமாகும் . அவர்களெல்லாம் நமக்கு ’வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பும் செய்திகளும் , நம்மோடு உரையாட வேண்டும் ; புகைப்படம் எடுக்க வேண்டும் என்று காட்டும் ஆர்வமும் நமக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது .

15 முதல் 35 வயதுக்குட்பட்ட மாணவர்களிடமும் , இளைஞர்களிடமும் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையை சரியான முறையில் வழி நடத்திட வேண்டும் என்ற பொறுப்புணர்வு அதிகமாகியிருக்கிறது . மிகப்பெரும் மனிதவளம் நம் கட்சிக்கு கிடைத்திருக்கிறது . அவர்களது ஆற்றலையும் , ஆர்வத்தையும் சரியான வழியில் பயன்படுத்தி மக்கள் பணியாற்ற வேண்டும் . 

#சொந்தங்களே …!

இளைய தலைமுறையை வெற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறமெனில் , சமுதாய பெரியவர்களிடமும் ஜமாத்துகளிடமும் நமக்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் அளவிட முடியாதது . நிறைய இமாம்கள் நம்மை தொடர்புக் கொண்டு வாழ்த்துகிறார்கள். நல்ல ஆலோசனைகளை வழங்குகிறார்கள் . 

சமூக இணைய தளங்களில் நமது ஜனநாயக போராளிகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் விளைவாக முஸ்லிம்களின் வட்டம் என்பதை தாண்டி பிற சமுதாய இளைஞர்களும் நமது கட்சியில் இணைகிறார்கள் என்பது தான் உச்சகட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது . ஆம் பெரும்பான்மையினரும் , சிறுபான்மையினரும் கைக்குலுக்கி சேவையாற்றும் சமூக நல்லிணக்கத்தின் களமாக நமது கட்சி மாறியிருக்கிறது . இதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது .   

#சொந்தங்களே…!

நமது கட்சிக்கு ஜமாத்தார்கள் , ஆலிம்கள் தரும் ஆதரவும் , அரசியல் சாராத இயக்கங்கள் தரும் ஆதரவும் புதிய உற்சாகத்தை தருகிறது . 

அதுபோல முஸ்லிம்கள் அல்லாத பிற சமுதாய மக்களும் நமது கட்சியில் பேரார்வத்துடன் இணைவதை பலரும் பாராட்டி மகிழ்கிறார்கள் .

‘நல்ல அரசியலை ; நாகரீகமான அணுகுமுறையை’ புரிந்து கொண்டு எல்லா மக்களும் நம்மை நோக்கி திரள்கிறார்கள் எனில் நாம் மிகுந்த பொறுப்புணர்வோடு பணியாற்ற கடமைப்பட்டிருக்கிறோம் .

முஸ்லிம்களால் தலைமையேற்று நடத்தப்படும் அனைவருக்குமான கட்சியாக மஜகவை வழி நடத்துவதில் தான் நமது வெற்றிகரமான அரசியல் பயணம் அடங்கியிருக்கிறது . முஸ்லிம்களின் பிரச்சனைகளையும் , பொதுப் பிரச்சனைகளையும் சம அளவிலே கையாண்டு சமூக நீதியையும் , நேர்மையான அரசியலையும் செயல்படுத்திட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது . 

நமது நாட்டில் முஸ்லிம்களின் அரசியல் என்பது பரந்து விரிந்த பார்வையோடும் , பக்குவமான அணுகுமுறையோடும் அமைய வேண்டும் . அதில் நாம் உறுதியாக இருக்கிறோம் .

#சொந்தங்களே…!

கட்சி தொடங்கிய 26 நாட்களில் மாநாடு நடத்துவது என்று அறிவிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் . இறையருளால் அந்த துணிச்சல் நமக்கு இருக்கிறது . 

‘இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்’ என்பது போல களத்தில் நமது சொந்தங்கள் மாநாட்டுப் பணிகளுக்காக இரவு – பகலாக உழைக்க தொடங்கிவிட்டார்கள் . 

நிதியில்லாமல் தலைமை தடுமாறுவதை அறிந்து , மாவட்டம் தோறும் நன்கொடைகளை திரட்டும் அதிமுக்கியப் பணியையும் முடுக்கி விட்டிருக்கிறார்கள் . நிதிதானே மாநாட்டின் முக்கிய அடித்தளமாக இருக்கிறது !

நமது மனிதநேய சொந்தங்கள் , தமிழகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு மக்களை திரட்டும் பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் . ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 , 200 என வேன்களும் , பேருந்துகளும் முன்பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன . 

சுவர் விளம்பரங்கள் எழுதவும் , பேனர்கள் வைக்கவும் , போஸ்டர்கள் ஒட்டவும் தேர்தல் கால விதிமுறைகள் தடுத்த நிலையிலும் , ஒவ்வொரு தொண்டரும் விளம்பர முகவர்களாக மாறிவிட்டார்கள் . 

#சொந்தங்களே…!

ஓடும் புலியின் வேகத்தை கூலாங்கற்களால் தடுத்திட முடியுமா ? காட்டாற்று வெள்ளத்தை கரைப்போட்டுத் தடுக்க களிமண்ணால் முடியுமா ? புயல் காற்றை தடுத்திட விஞ்ஞானத்தில் வழியுண்டா ? 

அதுபோல் தான் இடையூறுகளும் , தடைகளும் நம் படைவீரர்களை தடுத்திட முடியாது . பணிகளை முடக்கிட முடியாது ! இவர்கள் உடலில் ஓடுவது ரத்தமா ? எரிபொருளா ? என எல்லோரும் வியக்கும் வகையில் நம் மனிதநேய சொந்தங்கள் புறப்பட்டிருக்கிறார்கள் .

#எல்லா_புகழும்_இறைவனுக்கே .!

மார்ச் 26 , அன்று தலைநகர் சென்னையில் குடும்பத்தோடு கூடுவோம் ! புதிய பயணத்தில் புதிய வரலாற்றை தொடங்குவோம் .! வாரீர் .!

 #பணிந்தவன்_வென்றதில்லை ..!
 #துணிந்தவன்_தோற்றதில்லை ..!

அன்புடன் 
M.தமிமுன் அன்சாரி 
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக 
16_03_16

Thursday, March 10, 2016

முத்துப்பேட்டையில் இன்று முதல் 3 நாளைக்கு நகைக் கடைகள் அடைப்பு. சங்க  கூட்டத்தில் தீர்மாணம்



                  முத்துப்பேட்டை மார்ச் - 10

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அனைத்து நகை வியாபாரிகள் மற்றும் அனைத்து ஆபரணத் தொழிலாளர்கள் சங்க அவசர கூட்டம் நேற்று மாலை புதுக்காளியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினரும், முத்துப்பேட்டை சங்க தலைவருமான எஸ்.என்.ஆர்.சி.ராஜசேகர் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் பக்கிரிசாமி பக்தர், நிர்வாகிகள் மனோகரன், மகாலிங்கம், கணேசன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தங்க நகை மீதான ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்யக் கோரி நாளை(இன்று) வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 தினங்களுக்கு முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து நகைக்கடைகள் மற்றும் அனைத்து நகை ஆபரண தொழில் கூடங்கள் அடைத்து போராட்டத்தில் ஈடுப்படுவது என்று தீர்மாணிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் முகம்மது மைதீன், டி.எஸ்.குமார்,; சேகர், நசூருதீன், மனோகரன், தியாகராஜன், பிரசாத், ராஜேஷ் கண்ணா, அன்பழகன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

நன்றி:முகைதீன்பிச்சை,MTT

நாச்சிகுளம் செய்திகள்

மொபைல்போன்கள் விந்தணுக்களை 'எப்படியெல்லாம்' பாதிக்கிறது..!? அதிர்ச்சி தரும் உண்மை.....!



Nachikulam News  Mar,10,2016   01:09 PM
M

ஆண்மை சார்ந்த பிரச்சனைகள் :
தங்களின் மொபைல் போன்களை பெரும்பாலும் பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்து கொண்டு இருக்கும் அல்லது மற்றும் தினம் ஒரு மணி நேரம் மொபைலில் பேசும் ஆண்களுக்கு ஆண்மை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது பிறருடன் ஒப்பிடும் போது, தினம் ஒரு மணி நேரம் மொபைலில் பேசும் ஆண்களுக்கு ஆண்மை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட இரண்டு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

விந்தணுக்களின் தரம் :
மேலும் போனை சார்ஜ் செய்து கொண்டே பேசினாலும் விந்தணுக்களில் பாதிப்பு ஏற்படும், அதனால் விந்தணுக்களின் தரம் குறையும் என்ற அதிர்ச்சி தகவலையும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நெகடிவ் இம்பாக்ட் :
உறங்கும்போது மொபைல் போனை அருகாமையிலேயே அல்லது கட்டிலின் அருகே உள்ள மேசை மீதோ வைத்திருந்தால் கூட, அதனுள் இருந்து வெளிப்படும் 'நெகடிவ் இம்பாக்ட்' (Negative Impact) மூலம் விந்தணுக்கள் சார்ந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறர்கள் ஆய்வாளர்கள்.

குழந்தை கருவுறும் சிரமம் :
மேற்கத்திய நாடுகளில் படிப்படியாக குழந்தை கருவுறும் சிரமம் அதிகரித்துக் கொண்டே வருவதற்கு 40 சதவீதம் காரணியாக மொபைல்போன் பயன்பாடு தான் என்று கருதப்படுகிறது.

விந்தணு மரணம் :
மொபைல்போன்களில் இருந்து வெளிவரும் வெப்பம் மற்றும் மின்காந்த நடவடிக்கைகள் ஆனது ஆண்களின் விந்தணுக்களை மெல்ல மெல்ல பாதித்து அவைகளை முற்றலுமாக இறந்து போக வைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

20 இன்ச் அருகாமை
47% ஆண்கள் மொபைல்போன்களை தங்களின் இடுப்பு பகுதிக்கு 20 இன்ச் அருகாமையில் வைத்திருப்பதாலேயே விந்தணுக்கள் மோசமாக பாதிக்கப்படுகிறதாம்.

உயிரி மருத்துவ துறை :
ஆண் இனப்பெருக்க விகிதங்கள் மற்றும் மொபைல் போன்கள் நோய்த்தாக்கம் ஆகிய இரண்டிற்கும் இடையிலேயான இந்த ஆய்வு இனப்பெருக்க உயிரி மருத்துவ துறையால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போதை :

விந்தணுக்களின் நிலை குறைய குறைய குழந்தை பெற்று கொள்வதற்க்கான வாய்ப்பு கடினமாகி கொண்டே போகும் ஆகையால் மொபைல்போன் மீதான போதையில் இருந்து ஆண்கள் மீண்டு வர வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிததுள்ளனர்.

எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர் 'நோண்டுபவரா' நீங்கள்..? உஷார்..!

தலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.?!

தினம் ஒரு மணி நேரத்திற்கு மேல் மொபைல் போனில் பேசும் ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் குறைவதற்க்கான வாய்ப்பு மிக அதிகம் என்று கூறியது மட்டுமின்றி மேலும் பல மொபைல் போன் பயன்பாடு மற்றும் விந்தணுக்கள் சார்ந்த பல அதிர்ச்சி தரும் தகவல்களை அளித்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று..

நாச்சிகுளம் செய்திகள்

வாக்காளர் பட்டியலில்  விடுபட்ட பெயர் சேர்த்தல் , நீக்கல் , திருத்தல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைசம்மந்தமாகவும்......



Nachikulam Nrws  Mar 10  11:45

வாக்காளர் பட்டியலில் இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் ஏப்ரல் 15–ந் தேதிக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

வாக்காளர் அட்டை பெற வாக்காளர் சேவை மையம் என்ற மையத்தை வரும் மார்ச் 14–ந் தேதியில் (திங்கட்கிழமை) இருந்து தொடங்கவுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், திருத்தங்கள் செய்தல், புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பழைய அட்டையை மாற்றுதல் போன்ற தேவைகளுக்கு இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கிறவர்களுக்கு அது இலவசமாக வழங்கப்படும். அட்டையை மாற்ற வேண்டுமென்றால் ரூ.25 கட்டணம் செலுத்தவேண்டும்.

இந்த மையம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (ஆர்.டி.ஓ), கலெக்டர் அலுவலகம் ஆகிய தனி அறையில் செயல்படும்.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் விண்ணப்பம் செய்யலாம். ‘ஆண்டிராய்டு’ செல்போன் மூலம் tnelectionplaystore என்ற ‘ஆப்’பை பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்


நாச்சிகுளம் செய்திகள்

Tuesday, March 8, 2016

நாளை முழு சூரிய கிரகணம்: சென்னையில் 26 நிமிடங்கள் தெரியும்



Nachikulam News Mar8 19:18


சென்னை: நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை சென்னையில் 26 நிமிடங்கள் பார்க்க முடியும்.
சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் ஏற்படும். ஒரு ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படும். முழு சூரிய கிரணம் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கலாம்.
முழு சூரிய கிரகணம் என்றால் சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று தெரியும். இந்நிலையில் நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கிரகணத்தை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் முழுமையாக பார்க்க முடியும். கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் பாதி அளவில் தெரியும். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிரகணத்தை நன்றாக பார்க்க முடியும்.
இந்த கிரகணத்தை இந்திய மக்களும் பார்க்கலாம். இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, மைசூர், மங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவில் பாதி கிரகணத்தையே பார்க்க முடியும்.
சென்னையில் நாளை காலை 6.22 மணி முதல் 6.48 மணி வரை அதாவது 26 நிமிடங்கள் தான் கிரகணத்தை காண முடியும். கிரகணம் இந்திய நேரப்படி காலை 4.49 மணிக்கு துவங்கி காலை 9.08 மணி வரை நீடிக்கும்.
முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாச்சிகுளம் செய்திகள்