SALAAM

live tv

Thursday, December 31, 2015

டீ விற்கும் தந்தை... நீதிபதியான மகள்... ஒரு சாதனை பயணம்...!

20_nபஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்ட நீதிமன்றத்தின் வளாகத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருந்த சுரிந்தர் குமார், தன்னுடைய மகள் சுருதி, நிச்சயம் ஒரு நாள் பெரிதாக ஏதேனும் சாதிப்பாள் என நம்பினார்.
ஆனால், அந்த நீதிமன்றத்திற்கே நீதிபதியாகப் பொறுப்பேற்பாள் என அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நகோதர் எனும் சிறு நகரத்தில் வசிக்கும் சுருதி, நீதித்துறை சார்ந்த, பஞ்சாப் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்காக காத்திருக்கிறார்.
“இதைக் காட்டிலும் மகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் அமையப்போவதில்லை” என்கிறார் சுரிந்தர், தன் மகளின் வெற்றியைக் கொண்டாடியபடி. தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள சுருதி, பட்டியல் சாதியினருக்கான (SC) பிரிவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். மாநிலப் பள்ளியில் கல்வி கற்ற பின், சட்டப் படிப்பை தொடங்கிய சுருதி, குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
சிறு வயதில் இருந்தே நீதித்துறை சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் கொண்டிருந்த சுருதி, ஒரு கட்டத்தில், நீதிபதி ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு உழைத்துள்ளார். ஓராண்டுகால பயிற்சிக்குப் பின் தேர்வைச் சந்தித்த சுருதி, அதில் வெற்றி கண்டு சாதித்துள்ளார். சுருதியின் இந்தச் சாதனையை பாராட்டியுள்ள, ராஜ்ய சபா உறுப்பினரான அவினாஷ் ராய் கண்ணா, சுருதி, பஞ்சாப் மாநிலத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி, சாதிய நெருக்கடி போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சுருதி போன்றவர்கள் சாதித்துக் கொண்டே இருப்பது, மற்ற மாணவர்களுக்கும், நிச்சயம் ஊக்கத்தை அளித்திடும் என நம்பலாம்

ராஜபக்சே ஆட்சியில் மனித உரிமை மீறல்... வலுவான ஆதாரம் இருப்பதாக இலங்கை அரசு தகவல்





கொழும்பு: ராஜபக்சே மற்றும் அவரது ஆட்சியில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சே தோல்வி அடைந்தார். சிறீசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியின் படி, ராஜபக்சேவின் ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணைகள் தொடங்கின.
இதற்கென காவல் துறை, ராணுவம், உளவுத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழுவும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் சகோதரும், முன்னாள் நிதியமைச்சருமான பாசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். சில நிதி முறைகேடுகள் தொடர்பாக ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தியிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், ராஜபக்சேவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே, கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.
இதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள இந்த ஆதாரங்களே போதுமானவையாக உள்ளன. இந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்' என்றார்.

தபால் நிலையங்களில் பாஸ்ப்போர்ட் சேவை மையம்

post_officeதபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம்: மத்திய அரசு புதிய திட்டம் பரிசோதனை பணிக்கு போலீசாருக்கு பதில் போஸ்ட்மாஸ்டர்…
தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஏற்படுத்தவும், பரிசோதனை பணி போலீசாருக்கு பதில் போஸ்ட்மாஸ்டருக்கு வழங்கவும் மத்திய அரசு புதிய திட்டம் தீட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள தபால்நிலையங்களை பாஸ்போர்ட் சேவை மையங்களாக மாற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிரப்புவுதற்கு சிரமப்படுகின்றவர்கள் தபால் நிலையங்களுக்கு சென்றால் அவர்களுக்கு அதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தபால் நிலையங்களை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தபால் துறையுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சு நடத்தி வருகிறது. போஸ்ட்மாஸ்டர்களை ‘பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ஆபீசர்’ ஆகவும் நியமிக்க ஆலோசிக்கப்படுகிறது.
பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்தல் முழுவதும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பாஸ்போர்ட் விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்குகின்ற மையங்கள் இதற்காக பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கவும் செய்கின்றன என்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில் இதுபோன்ற ஒரு முடிவு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஸ்போர்ட் பெறுவதில் இடைத்தரகர்களை ஒழிக்க ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்ட போதிலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்குகின்ற பெயரில் ஏஜென்டுகளும், பாஸ்போர்ட் சேவா கேந்திராவை மையப்படுத்தி இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.தற்போது பாஸ்போர்ட்களை விநியோகம் செய்ய மட்டுமே தபால்துறையின் உதவி நாடப்படுகிறது. இந்தநிலையில்தான் சேவை மையமாக செயல்பட செய்ய இயலுமா என்ற கோணத்தில் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தட்கல் முறையில் விரைவாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கின்றவர்களிடம் போலீசாருக்கு பதிலாக போஸ்ட்மாஸ்டரை கொண்டு விசாரணை நடத்திடவும், திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்களை போஸ்ட்மாஸ்டர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களை விசாரணை அதிகாரியாக கொண்டு திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
‪#‎கூட்டுக்கொள்ளை‬ அடிக்கும் காவல்துறையிடமிருந்து விடுபட்டால் போதும்,, பாவிகள் இறக்கமின்றி ஈனத்தனமான வழிப்பறி செய்ராங்க , Passport Enquiry னு சொல்லிக்கொண்டு

5 வீடு, 6 மனைகள், 3 கார்கள், லாக்கர் நிறைய தங்கம், வெள்ளி: இதெல்லாம் என்ன தெறியுமா?




இது ஒரு கான்ஸ்டபிளின் சொத்து!

செய்தியை படியுங்கள் தெறியும்



              இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 5 சொகுசு வீடுகள், 6 மனைகள், 3 கார்கள், ஒரு எஸ்.யு.வி இருப்பது தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தலைமை கான்ஸ்டபிளாக இருப்பவர் அருண் சிங். லஞ்சம் வாங்க பெயர் போனவர். அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஜபல்பூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். பணிமாற்றம் செய்யப்பட்டதில் இருந்து அவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார்.
இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் அவர் பணிக்கு வராமல் இருப்பது பற்றி போபால் அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தூர், ரேவா மற்றும் சத்னா ஆகிய நகரங்களில் உள்ள அருண் சிங்கின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.

இந்தூர் அண்ணபூர்னா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு தலவாலிசந்தா பகுதியில் தலா 6 ஆயிரம் சதுர அடியில் இரண்டு மனைகள், மோ ரோட்டில் பண்ணை வீடு, மனைவி பெயரில் மனை, மகன் பெயரில் இரண்டு வீடுகள், போக்பாலில் அருண் பெயரில் வீடு, அனந்தபுரியில் இரண்டு மனைகள், நரேந்திரா நகரில் ஒரு மனை, நிபுஹாவில் 30 ஏக்கர் நிலம், ஒரு வீடு, ஹர்திகுர்தில் நிலம் ஆகியவை உள்ளன.
சோதனையின்போது அருண் சிங்கின் வீடுகளில் இருந்து நகை, பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி லாக்கரில் துப்பாக்கி, தோட்டாக்கள், 132 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி ஆபரணங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

அருண் சிங்கிற்கு சொந்தமாக 3 கார்கள் மற்றும் ஒரு எஸ்யுவியும் உள்ளது. இத்தனை சொத்துக்களையும் அவர் லஞ்சப் பணம் மூலம் வாங்கியுள்ளார். 32 ஆண்டு காலம் பணி புரிந்ததில் அவர் வருமானத்தை விட அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.

மாட்டியது இவர் ஒருத்தர்தான்
மாட்டாமல் இந்தியவில் எத்தனயோ காவலர்கள் குறிப்பாக தமிழகத்தில்......


நாச்சிகுளம் செய்திகள்

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் அருன்ஜெட்லிக்கு தொடர்பு கடித ஆதாரங்களுடன் ஆம் ஆத்மி குற்றசாட்டு

ashutoshடெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிரான கடித ஆதாரங்களை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது ஊழல் நடந்ததாக டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி உள்ளது. தன் மீதான ஊழல் புகாரை அருண் ஜெட்லி மறுத்து உள்ள நிலையில் இந்த ஊழல் பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமைத்து இருக்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி ஜெட்லிக்கு எதிரான கடித ஆதாரங்களை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த 2013-ம் ஆண்டு வரையில் ஜெட்லி பதவி வகித்தார். அப்போது டெல்லி கமிஷனருக்கு விசாரணையை முடித்துக் கொள்ள கடிதம் எழுதி உள்ளார் என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.
அருண் ஜெட்லிக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி, டெல்லி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர் அருண் ஜெட்லி, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான விசாரணையில் தலையிட முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதையை டெல்லி போலீஸ் கமிஷ்னர் பி.கே. குப்தாவிற்கு அருண் ஜெட்லி எழுதியதாக கடிதம் வெளியிடப்பட்டது. அந்த கடிதத்தின்படி, விசாரணை அதிகாரிகளுக்கு ஜெட்லி எழுதிய கடிதத்தில் சின்டிகேட் வங்கி கிரிக்கெட் கிளப் தொடர்புடைய தவறுகள் குறித்தான விசாரணையை முடிக்க கேட்டுக்கொண்டு உள்ளார். டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி மற்றொரு கடிதத்தையும் வெளியிட்டு உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி அருண் ஜெட்லி, டெல்லி சிறப்பு கமிஷனர் ரஞ்சித் நாராயணனுக்கு எழுதி உள்ளார். இவ்விக்காரத்தில் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அதிகாரிகளை விசாரிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். “புகார்கள் அனைத்தும் அடிப்படையற்றவை மற்றும் தவறுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் மீண்டும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக அதிகாரிகள் உணர்கின்றனர்,” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அஷுடோஷ் பேசுகையில், இக்கடிதங்கள் அருண் ஜெட்லி போலீஸ் விசாரணையை தடுக்க முயற்சி செய்து உள்ளார் என்பதை நிரூபித்து உள்ளது என்று தெரிவித்தார்.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்தது அருண் ஜெட்லிக்கு தெரியும் என்று கூறிய ஆம் ஆத்மி, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அருண் ஜெட்லி, டெல்லி போலீசுக்கு அழுத்தம் கொடுக்க தனது பதவியை தவறாக பயன்படுத்தினாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

Wednesday, December 30, 2015

வாட்ஸ் அப்பில் சுய விபரங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

      இன்று வரை 700 மில்லியன்
மக்கள் ஒரு மாதத்தில் ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்பட்டுகிறது. இந்த ‘வாட்ஸ் அப்’பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன. இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வளைதளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன் படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

1) வாட்சப் லாக்:

வாட்ஸ் அப்-ஐ லாக் செய்வதில் முக்கியமான விஷயம் முதலில் ஒரு பாஸ்வேர்டு அல்லது ‘பின்’ பயன்படுத்துதலே சிறந்தது. வாட்ஸ் அப்பிற்கென பிரத்தியேகமாக எந்த ஒரு லாக்கும் இல்லை. இதற்கென ஆப் லாக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மூன்றாவது மனிதர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆனாலும், செல்போன் தொலைந்து போகும் பட்சத்தில் அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ‘சாட் லாக்’, ‘வாட்ஸ் அப் லாக்’, ‘செக்யூர்சாட்’ இவை மூன்றும் ஆண்ட்ராய்டு போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தி யாரும் உங்களது தகவல்களை திருடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

2) வாட்சப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க:

புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை ‘டீசெலைக்ட்’ செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இதனை ‘பைல் எக்ஸ்ப்லோரர் ஆப்’ மூலம் தடுக்கலாம். இதில், நோ மீடியா எனும் பைலை உருவாக்குவதின் மூலம் தடுக்கப்படுகிறது. வாட்ஸ் அப் இமேஜை லாக் செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கலாம். ஆனால், போன்கள் திருடப்படும்போது 100% பாதுகாப்பைத் தரும் என கூற முடியாது.

3) லாஸ்ட் சீனை மறைப்பது:

நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் என மற்றவர்களுக்கு தெரியும். இது மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வழிவகை செய்யலாம். இந்த லாஸ்ட் சீன் மற்றவர்கள் அறியாதவாறு தடுக்க ‘ஹைடு லாஸ்ட் சீனை’ பயன்படுத்தலாம். ஆனால் இதை செய்தால் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.

4) ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க:

உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச் சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், ப்ரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.

5.) போலி தகவல்களிடம் விழிப்போடு இருங்கள்:

வாட்ஸ் அப் எப்பொழுதும் நேரடியாக உங்களோடு தொடர்பு கொள்வதில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் நேரடியாக உரையாடல்கள், ஆடியோ தகவல்கள், புகைப்படங்கள், மாற்றங்கள், வீடியோக்கள் எப்பொழுதும் மின்னஞ்சல் உதவியில்லாமல் உங்களுக்கு அனுப்பாது. குறிப்பிட்ட இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வந்தால் நிச்சியம் அது போலியாக தான் இருக்கும். இவை நம்பத்தகுந்தது அல்ல.

6) தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ் அப்பை செயலிழக்கச் செய்யுங்கள்:

செல்போன் தொலைந்தால், வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்சப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.

7) எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள்:

இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ் அப்பில் பகிராதீர்கள்.

8) வாட்ஸ் அப்பை ‘லாக் அவுட்’ செய்ய மறக்காதீர்கள்:

வாட்ஸ் அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்சப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரௌசர் மூலமோ செய்யலாம். உஷாராக இருங்கள்!

Monday, December 28, 2015

நாச்சிகுளம் அருகில் அரசு பேரூந்தில் பயணித்த பயணி மாரடைப்பால் மரணம்

நாச்சிகுளம் அருகில் அரசு பேரூந்தில் பயணித்த பயணி மாரடைப்பால் மரணம்
********************************

நாச்சிகுளம்  28/12/2015 -03:10pm

     இன்று நன்பகல் 1மணியளவில்
 திருத்துறைப்பூண்டியிலிருந்து நாச்சிகுளம் வழியாக பட்டுக்கோட்டை சென்ற அரசு பேரூந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இருக்கையில் அமர்ந்தபடியையே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் சக பயணிகள் நடுத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் சொல்லவும் உடனே பேரூந்து நாச்சிகுளம் நூர்மெடிக்கல் அருகில் நிறுத்தப்பட்டது. 

முத்துப்பேட்டை காவல்துறை வந்து பிரேதத்தை கைப்பற்றி இறந்தவரின் மொபைல் போனில் இருந்த நம்பர்களை வைத்து அடையாம் கானப்பட்டு உறவினர்கள் வரவழைக்கப்பட்டு காவல்துறை விசாரனை நடத்தப்பட்டது. 

இறந்தவர் பெயர் 
பத்மநாதன் வயது51
தகப்பனார் பெயர் பண்டரி ராயர் 
எடையூர் அருகாமையில் உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் முத்துப்பேட்டை செல்வதற்கு அம்மளூர் பேரூந்து நிறுத்தத்தில் பேரூந்து ஏறினார் என்றும் தெறியவந்தது.

சம்பவ இடத்தில் இருந்த நம்மிடம் உறவினர்கள் கேட்டுக்கொண்டதால்   முத்துப்பேட்டையிலிருந்து பைத்துல்மால் ஆம்புலண்ஸ் வரவழைக்கப்பட்டு உறவினர்களோடு பிரேதம் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது.

செய்தியும் படமும்:
நாச்சிகுளம் செய்திகள்  குழு👇         👇      👇



Saturday, December 26, 2015

சென்னையில் மழைவெள்ள நிவாரண மீட்பு பணியின்போது மரனமடைந்த இம்ரானின் குடும்பத்திற்கு ஆறுதல் நிதி மமக சார்பில் வழங்கப்பட்டது

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தன்னார்வத்துடன் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில்,விஷப்பூச்சி கடித்து 18 வயது நிரம்பிய சகோதரர் #இம்ரான் உயிரிழந்தது எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அவரது உடலை பார்வையிட்ட போது பத்திரிகையாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி அவர்கள், தமிழக அரசு இம்ரான் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதி வழங்க வேண்டுமென்றும், மேலும் தன்னார்வ அமைப்புகளும்,பொது மக்களும் உதவ வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே கடந்த 24_12_2015 அன்று நடைபெற்ற மமக தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் இம்ரான் குடும்பத்திற்க்கு ஒரு லட்ச ரூபாய் ஆறுதல் நிதி வழங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று இம்ரான் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் ஒரு லட்ச ரூபாய் நிதியை மமக பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி அவர்களும்,பொருளாளர் #ஹாரூன்_ரஷீது அவர்களும் கையளித்தனர்.

அப்போது மமக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராயபுரம் நாசர்,முகம்மது யூசுப்,தோப்புத்துறை.H.சேக் அப்துல்லாஹ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மமக தலைமையகம்

Friday, December 25, 2015

நடிகர், நடிகைகள் புத்தாண்டு விழாவை புறக்கணியுங்கள் ! இயக்குநர் வ கௌதமன்

சென்னை: பேரிடர் நேர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருவதால் புத்தாண்டு விழாவைப் புறக்கணிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் வ கௌதமன்.
அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:
தாய் தமிழ் உறவுகளுக்கும், நடிகர் - நடிகையர்களுக்கும்...
சமீபத்தில் பெய்த கன மழையிலிருந்து நம் மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் அவர்களது துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக தாய் தமிழகத்து உறவுகளுக்கும் என் திரை குடும்பத்து கலைஞர்களான நடிகர் நடிகையர்களுக்கும் 2016 புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
மழை பற்றிய வரலாற்று குறிப்பின்படி கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழையை விடவும் 2015 நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த மழையே பெருமழை என்றும் தமிழ் மண்ணில் நடந்த பேரிடர் மழை என்றும் நீரியல் வல்லுனர்களால் வர்ணிக்கப்படுகிறது.
மழை கொட்டி பெருக்கெடுத்த வெள்ளத்தால் குடிசையில் வசித்தோருக்கு வீடே பறிபோனது. வீட்டில் வசித்தோருக்கு விட்டிலிருந்த ஒரு பொருளும் இல்லாமல் போனது. முதல்முறையாக நகரத்துக்கு வந்து பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத் தொடங்கிய பல்லாயிரக் கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீடுகள் நாசமானது. ஏறத்தாழ தொண்ணூறு ஆயிரம் கோடிகள் இழப்பு. ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையால் மாநில அரசு திகைத்து நிற்கிறது. வழக்கம்போல் மத்திய அரசு பாராமுகமாக கிடக்கிறது.
பேரழிவு ஒன்று நடக்கும்போது இந்த உலகை காப்பதும் மீட்பதும் அதிகார வர்க்கங்களுக்கு முன் மனிதம்தான் என்பதை இந்த மண் மீண்டும் நிருபித்தது.
சாதி, மதம், இனம் பார்க்காமல் குடிநீரானாலும், உணவானாலும், உடைகள் மற்றும் மருந்தானாலும், வீதி வீதியாக ஊர் ஊராக உதவிகள் வந்து குவிந்தன. நம் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்த தமிழ் சமுகமும் மாபெரும் மனிதாபிமானத்தை பகிர்ந்து கொண்டது. யுத்தத்தால் சிதறடிக்கப்பட்டு உலகம் முழுக்க விழுந்த நம் தமிழீழ உறவுகள் கூட எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு நாங்களும் உதவுவோம் என நிதி சேகரித்து உதவிக்கொண்டிருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு இணையாக நம் திரைத்துறையினரும் முடிந்தவரை நிதிகள் தந்து உதவினர். பிறமொழி கலைஞர்களும் முதலமைச்சர் நிவாரண நிதியாக பெருமளவு தந்தனர்.
சில கலைஞர்கள் தங்களது புகழையும், பொருளையும் பார்க்காமல் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் நேரில் சென்று பணிவிடை செய்தனர். ஆனால் இன்னும் நம் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கவில்லை. ஒரு நிரந்தர தீர்வில்லை.
நடந்து முடிந்த சிதைவுகளை வைத்தே கொண்டாட்டம் வேண்டாமென கிருஸ்துமஸ் நிகழ்வையே ரத்து செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
வருமானத்தை பிரதானமாக கருதும் இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு ஒட்டல்கள் சங்கம் தங்களது விடுதிகளில் நடக்கவிருந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பணிவிடை செய்யப்போகிறோம் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் ஒன்றுகூடி பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறார்கள்.
ஜன்னலை திறந்து தாய்மனதோடு பாருங்கள். ஒரு பெரும் கூட்டம் படுக்க பாய்கூட இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது. மாற்று உடுப்புக்கும், மறுவேளை உணவுக்கும் வழியில்லாமல் பல்லாயிரக் கணக்கானவர்கள் திரிந்து கொண்டிருக்கையில், ஒரு வேளை அலைந்து திரியும் அந்த கூட்டத்தில் நாமோ அல்லது நம் குடும்பத்து உறுப்பினர்களோ நின்றிருந்தால் எப்படி இருக்கும் என ஒருமுறை கற்பனை செய்து பார்த்தாலே தாங்க முடியாமல் நெஞ்சம் வெடித்து விடும்.
எனது வேண்டுகோள் எல்லோருக்குமானது அல்ல. இந்த துயரங்கள் எதனையும் உள்வாங்காமல் புத்தாண்டு கொண்டாட்டதிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் என தாய்தமிழ் உறுவுகளுக்கும் என் திரைக்குடும்பத்தை சார்ந்த ஒரு சில கலைஞர்களுக்கும்தான்.
இதற்கான செலவு செய்ய ஏதோ ஒரு தொகையினை இந்நேரம் நீங்கள் கணிக்கிட்டுருப்பீர்கள். உங்களால் முடிந்தால் ஒரு நபரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ கரையேற்றினால் காலம் முழுக்க உங்களை அவர்கள் வாழ்த்துவார்கள். பிறப்பின் அற்புதமே ஒரு உயிர் இன்னொரு உயிரை மகிழ்விப்பதுதான் என்பதை செயலால் உணர்வோம்.
மனிதத்தை உயர்த்துவோம்.
2016 மனிதநேய ஆண்டாக உலகுக்கு பிரகடணப்படுத்துவோம். நன்றி.
-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

நாச்சிகுளம் செய்திகள்

நாச்சிகுளம் ஜமாத் வரவு செலவு கணக்கு சரிபார்க்க தற்காலிக தனிக்கைகுழு அமைக்கப்பட்டது

நாச்சிகுளம் 25/12/2015 04:15  pm

நாச்சிகுளம் ஜமாத் நிர்வாகம் 
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை 
ராஜினாமா செய்ததையடுத்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை 25/12/2015 இன்று 
ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜமாத் கூட்டம்கூடியது 

   அதில் ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை 
சரி பார்ப்பதற்கு ஆடிட் கமிட்டி அமைக்கப்பட்டது
ஜனாப் கஸ்டம்ஸ் நத்தர்ஷா அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆடிட் கமிட்டியில்
நபிலா அபுபக்கர், பஜில் அகமது ஆகிய 
மூன்று நபர்கள் கொண்ட கமிட்டியிடம் 
ராஜினாமா செய்த ஜமாத் நிர்வாகம் 
கணக்கு பதிவேடுகளை ஒப்படைத்தனர் பெற்றுக்கொண்ட மூன்று நபர்கள் கொண்ட 
ஆடிட் கமிட்டியிடம் ஒரு வாரகால அவகாசம் எடுத்துக்கொண்டு கணக்குகளை சரிபார்த்து
அடுத்த வார ஜும்மாவில் ஆடிட் அறிக்கையை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று 
ஜமாத்தார்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது


செய்தியும் படமும்:
நாச்சிகுளம் செய்திகள் குழு

Thursday, December 24, 2015

தாத்ரி கொலை சம்பவத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! மாட்டிறைச்சி என்ற வார்த்தையே இல்லை  


லக்னோ: தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் படுகொலை சம்பவம் நடந்து 3 மாதத்திற்கு பிறகு 15 பேரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாட்டிறைச்சி என்ற வார்த்தை குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் ஒரு குடும்பம் மாட்டிறைச்சி சமைத்து உண்டதாக வதந்தி பரவியது. அதன் தொடர்ச்சியாக முகமது அக்லக் (52) என்ற இஸ்லாமிய முதியவர் அக்கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.
மாட்டிறைச்சிக்காக மனித உயிர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் 15 பேர் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டுபேர் சிறுவர்களாகும். அக்லக்கின் மகள், இதில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக செயல்பட்டதாக உள்ளூர் பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ராணாவின் மகன் விஷால் என்பவர் பெயரும் காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேர் கடந்த இரு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மாட்டிறைச்சி என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உ.பியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது

நாச்சிகுளம் செய்திகள்
.

நாச்சிகுளம்
ஜமாத் நிர்வாகிகள் ராஜினாமா.
"""""""""""""""""""""""""""""
""""""""""""""""""""""""""""

நாச்சிகுளம் ஜமாத்
அன்பு சகோதரர்களே நாச்சிகுளம் ஜமாத் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு நடந்ததாக ஏற்கனவே நமது குழுமத்தின் சார்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம் அனைவரும் படித்திருப்பீர்கள் ஜமாத்தின் அந்த கூட்டத்தில் இறுதியாக ஜமாத் நிர்வாகம் ராஜினாமா செய்துள்ளதாக நமக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன

மேலும் நாச்சிகுளம் ஜமாத் நிர்வாகத்தில்
செயலாளர் , பொருளாளர் ,
துனை செயலாளர் ஆகிய மூன்று பொறுப்புதாரிகள் மட்டுமே  இறுதியாக நிர்வாக பொறுப்பில் இருந்ததால் அந்த மூன்று நிர்வாகிகளும் ராஜினாமா செய்து அடுத்த கட்ட ஜமாத் தேர்தலுக்கு வழி ஏற்படுத்தியுள்ளனர் ஆகவே  நாச்சிகுளம் முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபைக்கான நிர்வாகிகள் தேர்வு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படுமென எதிற்பார்க்கப்படுகிறது

நாச்சிகுளம் செய்திகள் குழு
*****************************

Saturday, December 19, 2015

அதிக முறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் எளிதில் வெறுமனே சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம். இப்படி இருப்பதால் தான் என்னவோ, இன்றைய தலைமுறையினருக்கு பல்வேறு நோய்கள் வேகமாக தாக்குகின்றன.
அதிலும் காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் இல்லை என்று, இரவிலேயே உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் காலையில் அவற்றை சூடேற்றி சாப்பிடுவோர் பலர். நீங்கள் இந்த வகையை சேர்ந்தவர்கள் என்றால் இதை கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டும். இப்போது அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகளை பார்க்கலாம்.

* சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்தகைய சிக்கனை 2-3 முறைக்கு மேல் சூடேற்றி உட்கொண்டால், அதன் காரணமாக பல்வேறு செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சிக்கனை வாங்கி சமைத்தால், தேவையான அளவு மட்டும் உபயோகித்துவிட்டு, மீதமுள்ள ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். தேவைப்படும் போது சமைத்து சாப்பிடுங்கள்.

* பசலைக்கீரையில் இரும்புச்சத்தும், நைட்ரேட்டுகளும் வளமாக உள்ளது. இதனை பலமுறை சூடேற்றினால், அதில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாற்றப்படுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களாகவும் மாறும். எனவே இந்த கீரையை கொண்டு சமைத்த உணவுகளை பலமுறை சூடேற்றாதீர்கள்.

* முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்தும் சாப்பிடக்கூடாது. ஆய்வு ஒன்றில் முட்டையை பலமுறை சூடேற்றி உட்கொண்டால், அது செரிமான மண்டலத்தை கடுமையாக பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

* காளான்களில் காம்ப்ளக்ஸ் புரோட்டீன்கள் உள்ளதால், இதனை வாங்கி ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றாதீர்கள். இதனால் தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

* உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்த பின்னர், மீண்டும் சூடேற்றி உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள ஒருசில சத்துக்களானது பலமுறை சூடேற்றும் போது நச்சுமிக்கவையாக மாறிவிடும். மேலும் உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து, வேக வைத்து சாப்பிடுங்கள். இதனால் அதிலிருந்து முழு சத்தையும் பெற முடியும்

Thursday, December 17, 2015

இன்ஷா அல்லாஹ் விரைவில் ......

இன்ஷா அல்லாஹ் விரைவில் .......
மீண்டும் nachikulam news. நாச்சிகுளம் செய்திகள்  இணையதளம்  இயங்கும் ....

www.nachikulam.tk

Saturday, June 20, 2015

முதல் நோன்பு இப்தார் நிகழ்ச்சி......



முதல் நோன்பு இப்தார் நிகழ்ச்சி.......

நாச்சிகுளம் முஸ்லிம் ஜமாத்திற்கு உட்பட்ட நாச்சிகுளம் ஜும்மா பள்ளிவாசலில் (முஹைதீன் பள்ளிவாசல் ) சிறப்பாக நடைபெற்றது .. இதில் பெரியோர்களும் சிறியோர்களும் கலந்துகொண்டனர் ..........















படங்கள்
நாச்சிகுளம் வாட்ஸ் அப் செய்தி  குழுமம் ......