SALAAM

live tv

Tuesday, January 12, 2016

முத்துப்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தர வேண்டும். நெடுஞ்சாலை துறைக்கு மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை.

    

     முத்துப்பேட்டை ஜன – 12
                    
  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மனிதநேய மக்கள் கட்சி                              நகரச் செயலாளர்  முஹம்மது நியாஸ் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகரங்ளில் ஒன்றாக முத்துப்பேட்டை திகழ்கிறது. இங்கு கோவிலூர் மந்திரிரபுரீஸ்வரர் கோவில், தில்லைவிளாகம் ராமர் கோவில், ஜாம்புவானோடை தர்ஹா, அலையாத்தி காடுகள் என பல சுற்றுலாதளங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அலையாத்தி காடுகளை சூழல் சுற்றுலாதளமாக அறிவித்து பணிகள் நடைபெற்று வருகிறது. முத்துப்பேட்டை நகருக்குள் அதிகளவில் வாகனப்போக்குவரத்துகள் இருந்து வருகிறது. குறிப்பாக அதிகளவில் மக்கள் வந்து செல்லும் பகுதியாக பழைய பேருந்து நிலையம், மன்னை சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, பட்டுக்கோட்டை சாலை போன்ற பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிது. பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்பதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேற்கண்ட பகுதிகளில்  சாலைகளில் ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் செம்படவன்காடு ஈ.சி.ஆர் இணைப்புச்சாலை முதல் ஆலங்காடு ஈ.சி.ஆர் இணைப்புச்சாலை வரை அதாவது முத்துப்பேட்டை வழி பட்டுக்கோட்டை சாலை, முத்துப்பேட்டை வழி மயிலாடுதுறை சாலை பல ஆண்டுகளாக சாலையை பராமரிக்காததால், சாலையில் புழுதி மணல்கள் நிறைந்து சாலை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. சாலைகளில் பேருந்துகள் மற்றும் மகிழுந்துகள் செல்லும்போது சாலைகளில் உள்ள புழுதி மணல் எழுப்பப்பட்டு இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், பாதசாரிகளும் நிலைதடுமாறும் அளவுக்கு உள்ளது. இதனால் மிகப்பெரிய மாசு ஏற்பட்டு ஆஸ்துமா மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாமலும் நிலைதடுமாறி பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தற்போது பருவமழை பெய்துள்ளதால் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்களில் செல்வோர்கள் நிலைதடுமாறி சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட சாலைகளில் தண்ணீர் தேங்காமல் தரமான சாலை அமைத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறும், சாலையோர நடைமேடை அமைத்து தர வேண்டும். இவ்வாறு தனது மனுவில் மனிதநேய மக்கள் கட்சி                              நகரச் செயலாளர்  முஹம்மது நியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment