SALAAM

live tv

Saturday, January 16, 2016

சமூக வலைதளங்களில் வதந்திகளை அகற்ற தனிப்படை

சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவும் பொய்யான தகவல்களை அகற்ற, காவல்துறையில் ஒரு தனிப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் பரப்படும் பொய்யான தகவல்களை கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வந்த தமிழக காவல்துறை இப்போது, வாட்ஸ் ஆப்பிலும் தனது பணியைத் தொடங்கி உள்ளது.இத்தகைய செய்திகளை 24 மணி நேரமும் இரவு, பகலாக கண்காணிக்க சுமார் 60 பேர் கொண்ட குழு வேலை செய்கிறது.

சமீபத்திய வெள்ளத்தின் போது, ஏரிகள் உடைந்ததாலும், முதலைப் பண்ணைகளில் நீர் புகுந்ததாலும், முதலைகள் மக்கள் குடியிருப்புகளை நோக்கி வருகின்றன என்ற செய்தி பரவியது. செய்தி உண்மையா என்று கேட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு ஏராளமான அழைப்புகள் வந்துகொண்டே இருந்திருக்கின்றன.

கடந்த செவ்வாய்க் கிழமை அன்று, சென்னையில் உள்ள சில பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தது. சமூக ஊடகங்களில் அந்த செய்தி தீயாகப் பரவியதையடுத்துப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காவல்துறை தீவிரமாகப் பரிசோதித்ததில் , செய்தி வெறும் புரளி எனத் தெரியவந்தது.

பொய்யான தகவல்களின் தீவிரத்தையும், வேகத்தையும் குறைக்கும் பொருட்டு, காவல்துறையினர் வாட்ஸ் ஆப்பில் புரளியை மறுக்கும் செய்திகளை அனுப்பத் தொடங்கி உள்ளனர்.

இதன் மூலம் காவல்துறையினர், வெளியாகும் தகவலின் உண்மைத் தன்மையை, சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு அறிகின்றனர். அதை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களுக்குச் செய்திகளை அனுப்புகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கை

தெருக்களில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்கள், காவல்துறையின் கேள்விகளுக்கு சரியான வகையில் பதிலளிக்கவில்லை எனும்போது அவர்கள் காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி பேசும்போது, “சந்தேகத்துக்கு உரிய நபர்கள், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று குற்றங்களைத் தடுக்க, மற்றொன்று தீயவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த.

வேளச்சேரியில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிற்கும் நபர்களை அழைத்துக் கேள்விகள் கேட்கிறோம். சரியான பதில் வரவில்லை என்றாலோ, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாலோ அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கிறோம். சரியான முறையில் பதிலளிக்கிறார் என்றால் அவரை அனுப்பி விடுகிறோம்.

இந்த முறை, பழைய குற்றவியல் வழக்குகளைத் தீர்க்கவும் உதவுகிறது” என்றார்

No comments:

Post a Comment