SALAAM

live tv

Friday, January 12, 2018

விவேகணந்தர் பிறந்த நாளான ஜனவரி-12 இன்று தேசிய இளைஞர் தினம்



12/1/2018
வரலாற்றில் இன்று…

தேசிய இளைஞர்தினம்!

இன்றைய  தினம் சுவாமி விவேகணந்தர் பிறந்த நாள்
இத்தினத்தை நமது இந்திய திருநாட்டில்
தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

சுவாமி விவேகணந்தர் இளைஞர்களின் மேல்
அதீத நம்பிக்கை வைத்திருந்தார்
எப்படி என்றால்?

வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான
இளைஞர்கள்தான் இன்றைய தேவை.
அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள்.
உலகை மாற்றிக் காட்டுகிறேன்”
என எழுச்சி உரை ஆற்றினார்.

 இதில் கவனிக்க வேண்டியது. என்னவென்றால்
விவேகானந்தர் ஏதோ 100 இளைஞர்களைக் கேட்கவில்லை.
வலிமை மிகுந்த, நம்பத்தகுந்த எனும்போது அங்கு உடல் பலம்,
சிந்தனை வளம், கொள்கையில் உறுதி உடைய
இளைஞர்களையே அவர் தேடினார்.
அப்போதுதான் புரட்சி சாத்தியம் என்று குரல் எழுப்பினார்.

இப்படி எது கல்வி என்பதில் தொடங்கி,
உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம்,
சமூக நல்லிணக்கம் என்பதுவரை
இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்
விவேகானந்தர்.ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற
பார்வையும் கொண்டிருந்த
அவருடைய சிந்தனைகளை
ஆன்மிகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால்,
இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்.
இளைஞர்களை முன்னிருத்தியே அவர்
பல்வேறு போதனைகளையும்
கருத்துக்களையும் கூறியதால்தான்
இன்றைய தினத்தை சில ஆண்டுகளுக்கு முன்
 அரசே அறிவித்து  ஜனவரி_12 ஆம் தேதியை
 தேசிய இளைஞர்கள் தினம் என்று  கொண்டாடப்படுகிறது.