SALAAM

live tv

Tuesday, April 4, 2017

விவசாயி அய்யா கண்ணுவிடம் ரகசியமாக மண்ணிப்புக் கேட்ட எச்.ராஜா!




ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் பிரச்சனைக்காக 21வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார் அய்யா கண்ணு. இவர் ஆடி கார் வைத்திருப்பதாகவும், வங்கியில் கடன் வாங்கிவிட்டு கட்டாமல் ஏமாற்றியதாவும் எச்.ராஜா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 இந்நிலையில் நியூஸ் மினிட் இணையதளத்தில் அய்யா கண்ணு அளித்துள்ள பேட்டி சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. அதில் கடந்த சனிக்கிழமை தன்னை எச்.ராஜா தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, மன்னிப்பு கேட்டதாக அய்யா கண்ணு கூறியுள்ளார்.

 இதனை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என தான் கேட்டதாகவும், திங்கட்கிழமை வெளியிடுவேன் என எச். ராஜா கூறியதாகவும் அய்யா கண்ணு தெரிவித்துள்ளார்.

எச். ராஜாவின் இந்த முடிவிற்கு காரணம், பொதுமக்கள் தானாம். எச். ராஜா ஊடகங்களில் தாறுமாறாக பேசியதை தொடர்ந்து, அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பலரும் வசை பாடியுள்ளனர். இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் ஒரு கட்டத்தில் அவரே அய்யா கண்ணுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் இன்று வரை அவர் பொது மன்னிப்பு கேட்கவில்லை. இதுகுறித்து கூறிய அய்யா கண்ணு, மனிதர்கள் தான் தாங்கள் செய்த தவறில் இருந்து திருந்த வேண்டும் என்று நினைப்பார்கள், மிருகங்கள் அப்படி நினைக்காது என்றார். 20 ஏக்கர் நிலம் தனக்கு உள்ளதாகவும், ஆடி கார் இல்லை என்றும், வங்கியில் கடன் நிலுவை எதுவும் தான் வைத்திருக்கவில்லை என்றும் எச்.ராஜா தனது குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்கத் தயார் என்றும் அய்யா கண்ணு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



நாச்சிகுளம் செய்திகள்✍

No comments:

Post a Comment