SALAAM

live tv

Thursday, December 31, 2015

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் அருன்ஜெட்லிக்கு தொடர்பு கடித ஆதாரங்களுடன் ஆம் ஆத்மி குற்றசாட்டு

ashutoshடெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிரான கடித ஆதாரங்களை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது ஊழல் நடந்ததாக டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி உள்ளது. தன் மீதான ஊழல் புகாரை அருண் ஜெட்லி மறுத்து உள்ள நிலையில் இந்த ஊழல் பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமைத்து இருக்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி ஜெட்லிக்கு எதிரான கடித ஆதாரங்களை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த 2013-ம் ஆண்டு வரையில் ஜெட்லி பதவி வகித்தார். அப்போது டெல்லி கமிஷனருக்கு விசாரணையை முடித்துக் கொள்ள கடிதம் எழுதி உள்ளார் என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.
அருண் ஜெட்லிக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி, டெல்லி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர் அருண் ஜெட்லி, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான விசாரணையில் தலையிட முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதையை டெல்லி போலீஸ் கமிஷ்னர் பி.கே. குப்தாவிற்கு அருண் ஜெட்லி எழுதியதாக கடிதம் வெளியிடப்பட்டது. அந்த கடிதத்தின்படி, விசாரணை அதிகாரிகளுக்கு ஜெட்லி எழுதிய கடிதத்தில் சின்டிகேட் வங்கி கிரிக்கெட் கிளப் தொடர்புடைய தவறுகள் குறித்தான விசாரணையை முடிக்க கேட்டுக்கொண்டு உள்ளார். டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி மற்றொரு கடிதத்தையும் வெளியிட்டு உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி அருண் ஜெட்லி, டெல்லி சிறப்பு கமிஷனர் ரஞ்சித் நாராயணனுக்கு எழுதி உள்ளார். இவ்விக்காரத்தில் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அதிகாரிகளை விசாரிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். “புகார்கள் அனைத்தும் அடிப்படையற்றவை மற்றும் தவறுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் மீண்டும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக அதிகாரிகள் உணர்கின்றனர்,” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அஷுடோஷ் பேசுகையில், இக்கடிதங்கள் அருண் ஜெட்லி போலீஸ் விசாரணையை தடுக்க முயற்சி செய்து உள்ளார் என்பதை நிரூபித்து உள்ளது என்று தெரிவித்தார்.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்தது அருண் ஜெட்லிக்கு தெரியும் என்று கூறிய ஆம் ஆத்மி, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அருண் ஜெட்லி, டெல்லி போலீசுக்கு அழுத்தம் கொடுக்க தனது பதவியை தவறாக பயன்படுத்தினாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

No comments:

Post a Comment